T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம் சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது

images (8)

T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம்.

images (8)

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்கள் . அசைக்கிய முடியாது என்று நினைத்த தமிழக அரசை அசைத்துக் காட்டியது செங்கொடி இயக்கம்.
இறுதியில் போராட்டம் நடத்திய C I T U , R E W A அமைப்பின் தலைவர்களை அமைச்சர் அனைத்து பேசினார். கோரிக்கைகளை ஏற்றுகொள்வதாகவும் உடனடியாக நிறை வேற்றுவதாகவும் வாக்குறுதியளித்தார் சட்டமன்றதிலும்C I TU
கோரிக்கைகள் நியாயமானது தான் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கலாம் என்று உறுதி அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். 234 சட்டமன்ற உறுப்பினர்களில்
C P I (M) மட்டுமே நமக்காக குரல் கொடுத்தனர். அந்த அடிப்படையில் நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைவரும் C I T U தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதில் அரசு நமது கோரிக்கைகள் ஏற்றுக்கொண்ட அடிப்படையில்
சம்மேளன நிர்வாகிகள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் 62 நாள் போராட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைத்த ClTU இணைக்கப்பட்ட சங்கங்கள், REWA மற்றும் முழுமையாக உணவு வழங்கிய CPI(M)குமரி மாவட்ட குழு மற்றும் CITU குமரி மாவட்ட குழு Dyfi , SFI, மாதர் அமைப்புகள் விவசாயிகள் சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம் காவல்துறை மற்றும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. நன்றி

தமிழக அரசு ஏற்றுக் கொண்டபடி கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் வலுவான போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும்

சுரேஷ் C மார்த்தாண்டம் பொதுச்செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *