செய்திகள் பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 5, 2025, 16:44 [IST] Share This Article சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பது, விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்வது, சரக்கு போக்குவரத்து அதிகரிப்பது ஆகியவை காரணமாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் என்ற நிலை உண்டாகி இருக்கிறது.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு விட்டன, மத்திய அரசின் அனுமதியும் , விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியும் பெறப்பட்டு விட்டது. தற்போது தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம்…