செய்திகள் Snapchat உடன் கூட்டணி.. Perplexity அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அதிரடி முடிவு..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Thursday, November 6, 2025, 12:34 [IST] Share This Article எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என்ற நிலை உருவாகிவிட்டது, பிரபல சமூக ஊடக நிறுவனமான ஸ்னாப்சாட், பெர்ப்லெக்ஸிட்டி AI நிறுவனத்துடன் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், ஸ்னாப் பங்கு விலை நீட்டிப்பு வர்த்தகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.அப்படி என்னப்பா ஒப்பந்தம் இது..? ஸ்னாப் பங்குகள் 25 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது. பெர்ப்லெக்ஸிட்டி நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு உதவும்..?பெர்ப்லெக்ஸிட்டி AI நிறுவனம், ஸ்னாபுக்கு ஒரு ஆண்டில் 400 மில்லியன் டாலர் பணம் மற்றும் பங்குகளாக வழங்கும். இந்த ஒப்பந்தத்தின் வருவாய் அடுத்த ஆண்டு முதல் நிறுவனத்தின் முடிவுகளில்…