ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை?
எம்.எஸ்.எம்.இ ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை? Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 16, 2025, 9:22 [IST] Share This Article இந்திய அரசானது உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக உற்பத்தியை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பல திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமான திட்டம் உற்பத்தி சார்ந்த பிஎல்ஐ ஊக்கத் திட்டம் தான். இதன் மூலம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படும் அரசு, இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்குவித்து வருகிறது.அந்த வகையில் தற்போது ஸ்பெஷாலிட்டி ஸ்டீலுக்கான மூன்றாவது சுற்று பிஎல்ஐ (PLI) திட்டத்தில், எம்.எஸ்.எம்.இ -க்கள் நுழைவதை எளிதாக்கியுள்ளது. எம்.எஸ்.எம்.இ -க்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன, இதன் மூலம் நாட்டின்…