மருந்து, மாத்திரைகளின் விலை உயர போகிறதா? – மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை!! – Allmaa
செய்திகள் மருந்து, மாத்திரைகளின் விலை உயர போகிறதா? – மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 17:22 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு மருந்து உற்பத்திக்கான மூல பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு குறிப்பிட்ட சில மருந்து பொருட்களுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளின் உற்பத்திக்கு தேவையான active pharmaceutical ingredients எனப்படும் மூலப்பொருட்களுக்கு அரசு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க உள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டால் பல்வேறு மருந்து உற்பத்திக்கான செலவுகளை அதிகரித்து மருந்துகளின் விலை உயரும் என நிறுவனங்கள் கூறுகின்றன.எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசு வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படக்கூடிய மருந்து தயாரிப்பு பொருட்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயம் செய்ய முடிவு செய்திருக்கிறது…