NPS திட்டத்தில் இது தெரியாம முதலீடு செய்யாதீங்க! புதிய விதிமுறைகள் உங்கள் ஓய்வூதியத்தை குறைக்குமா?

befunky-collage-2026-01-21t085215-625-1768965830

  பர்சனல் பைனான்ஸ்

NPS திட்டத்தில் இது தெரியாம முதலீடு செய்யாதீங்க! புதிய விதிமுறைகள் உங்கள் ஓய்வூதியத்தை குறைக்குமா?

Personal Finance oi-Pugazharasi S By Published: Wednesday, January 21, 2026, 8:54 [IST] Share This Article

NPS திட்டத்தில் 85 வயது வரை முதலீடு செய்யும் வசதி, பென்ஷன் தொகைக்கு எதிரான கடன் என 2026-ல் பல வசதிகள் வந்துவிட்டன. ஆனால், இந்த நெகிழ்வுத் தன்மையே பலருக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு ஒரு விதியும், மற்றவர்களுக்கு ஒரு விதியும் இருக்கும் நிலையில், உங்களுக்கான சரியான தேர்வு எது என விரிவாக பார்க்கலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு பாதுகாப்பான ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டம் ஆகும். கடந்த ஆண்டின் இறுதியில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்பிஎஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது. ஆக அதை முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீட்டை திட்டமிடுதல் சிறப்பு. இப்பதிவில் தனியார் ஊழியர்கள் மற்றும் மற்ற சந்தாதாரர்களுக்கான புதிய நடைமுறைகளை பார்ப்போம்.

NPS திட்டத்தில் இது தெரியாம முதலீடு செய்யாதீங்க! புதிய விதிமுறைகள் உங்கள் ஓய்வூதியத்தை குறைக்குமா?

உங்கள் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது?

நீங்கள் என்பிஎஸ் திட்டத்தில் செய்யும் முதலீடானது பங்குகள், கார்ப்பரேட் பத்திரங்கள், அரசு பத்திரங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு நிதிகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய இரு வழிகள் உள்ளன. ஒன்று ஆக்டிவ் சாய்ஸ். இதில் எந்த பகுதியில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். இரண்டாவது ஆட்டோ சாய்ஸ். இதில் உங்களுக்கு முதலீடு பற்றி தெரியவில்லை என்றால், உங்கள் வயதிற்கு ஏற்ப சிஸ்டமே தானாக பிரித்து முதலீடு செய்யும். வயது கூட கூட, ரிஸ்க் அதிகமான முதலீடுகள் குறையும். அதாவது ஈக்விட்டி போன்ற முதலீடுகள் குறைக்கப்பட்டு, பாதுகாப்பான அரசு பத்திரங்களில் உங்கள் பணம் அதிகமாக மாற்றப்படும்.

முதலீட்டிற்கான விதிகள்?

உங்கள் பணத்தை எந்தெந்த சொத்துக்களில் எவ்வளவு சதவீதம் பிரிக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். முன்பு NPS திட்டத்தில் 75% நிதி மட்டுமே ஈக்விட்டியில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் 200 பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. ஆனால் புதிய மாற்றங்கள் படி, இந்த வரம்பு விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது 100% ஈக்விட்டியில் முதலீடு செய்து கொள்ளலாம். அதோடு 250 பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டு. இதன் மூலம் வருமானமும் அதிகமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

வயது வரம்பு நீட்டிப்பு!

வயது வரம்பை பொறுத்த வரையில் முன்பு 75 வயது வரை மட்டுமே கணக்கை வைத்திருக்க முடிந்தது. இப்போது, சந்தாதாரர்கள் 85 வயது வரை தங்களது முதலீட்டைத் தொடரலாம். இது உங்கள் பணம் நீண்ட காலம் கூட்டு வட்டி முறையில் வளர உதவிகரமாக இருக்கும். வழக்கமாக 60 வயது பூர்த்தியடையும் போது நீங்கள் திட்டத்திலிருந்து வெளியேறலாம். அப்படி வெளியேறும் போது, உங்கள் மொத்தத் தொகையில் 80% வரை ஒரே தவணையாக எடுத்து கொள்ளலாம். இருப்பினும் அதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். அதாவது என்பிஎஸ் திட்டத்தில் இணைந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். இல்லையேல் 60 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் அல்லது பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். 80% போக மீதமுள்ள 20% கட்டாயம் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும். இது முன்னதாக 40% கட்டாயம் இருக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் மொத்த சேமிப்பு தொகையானது 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், நீங்கள் வருடாந்திர திட்டத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. 100% தொகையும் முழுமையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இதை மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக எஸ் டபிள்யூ பி போன்றும் எடுத்துக் கொள்ளலாம்.

பணத்தை எடுக்கவும் ரூல்ஸா?

முழு முதலீட்டுக் காலத்தில் (அதாவது நீங்கள் கணக்கைத் தொடங்கியதில் இருந்து 60 வயது அடையும் வரை) மொத்தம் 3 முறை மட்டுமே, முன்னதாக பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய அறிவிப்புகள் படி, இது 4 முறை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் 25% வரை அனுமதிக்கப்படுகிறது. ஒருமுறை பணம் எடுத்த பிறகு, அடுத்த முறை எடுக்க 4 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். இருப்பினும் தீவிர மருத்துவச் சிகிச்சைகள், விபத்து அல்லது ஊனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக எனும் போது கால இடைவெளி தேவையில்லை.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Planning to Invest in NPS in 2026? Are You Aware of the New Rules That Could Change Your Pension?

Latest NPS updates permit 80% tax-free lump-sum withdrawals, extend investment age to 85, and introduce loan facilities against assets. Story first published: Wednesday, January 21, 2026, 8:54 [IST] Other articles published on Jan 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *