MSME, ஸ்டார்ட் அப் -களுக்கு வாய்ப்புகளை அள்ளித் தரும் பொழுதுபோக்கு துறை: OTT-ஆல் அசுர வளர்ச்சி தான்!
Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 9, 2025, 14:59 [IST] Share This Article
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஓவர் தி டாப் (OTT) பொழுதுபோக்குத் துறையானது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்-களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திலும் கணிசமான பங்களிப்பை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இது தொலைக்காட்சிப் பொழுதுபோக்கின் இடையூறாக தொடங்கியிருந்தாலும், தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தொழில் முனைவோரை மாற்றியமைக்கும் பல பில்லியன் டாலர் சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி!
இது குறித்த ஃபிக்கி மற்றும் EY அறிக்கையின் படி, குறைந்த கட்டணத்திலான இணைய அணுகல், பிராந்திய மொழிகளின் ஆதிக்கம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றால் இந்தியாவின் ஓடிடி சந்தையானது 2027ம் நிதியாண்டிற்குள் 7 பில்லியன் டாலரை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துதலாகவும் மாறலாம்.
ஓடிடி பார்வையாளர்களில் 65%-க்கும் அதிகமானவர்கள், தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருகிறார் என அறிக்கையானது கூறுகிறது. இந்த மாற்றம் உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ-க்கள் அளவிலான ஸ்டுடியோக்கள், டப்பிங் ஏஜென்சிகள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளை சார்ந்த எம்.எம்.எஸ்.இ-க்கள் மற்றும் ஸ்டார்ட் அப்-களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை கொடுக்கிறது.
மேலும் பிராந்திர டிஜிட்டல் விளம்பரத்திற்கான தேவையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறிய அளவிலான பிராண்டுகள் மற்றும் சிறு வணிகங்கள், உள்ளூர் நிறுவனங்கள், பாரம்பரிய தொலைக்காட்சியை விட, மிக குறைந்த செலவில் ஓடிடி விளம்பரங்களைக் பயன்படுத்துகின்றன.
ஆக குறைந்த செலவில் குறிப்பிட்ட இலக்கு குழுமங்களை குறிவைக்கும் டிஜிட்டல் விளம்பரங்களை எம்.எஸ்.எம்.இ-க்கள் செய்ய முடியும். இந்தியாவின் ஓடிடி விளம்பர சந்தையானது ஆண்டுக்கு 25% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான பலனை அடையலாம்.
புதிய வணிகங்கள்!
சொந்த திரைப்பட தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில் முனைவோர் உள்ளிட்டோர், ஓடிடி தளத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்களது திறமையின் மூலம் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றனர். இது பாரம்பரியமான தொலைக்காட்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று.
இது சிறு சிறு புதிய வணிகங்கள் தோன்ற காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக எடிட்டிங் ஸ்டுடியோ, சிறிய அளவில் திரைப்படங்கள், தொடர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாடகைக்கு விடுவது, சமூக வலைதள புரோமோஷன் செய்யும் நிறுவனங்கள், டப்பிங் ஸ்டுடியோ என பலரையும் ஒருங்கிணைக்கும் அம்சங்கள் ஓடிடி-யைச் சார்ந்துள்ளன. இது எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இப்பிரிவில் தொடர்ந்து தங்களை விரிவுபடுத்திக் கொள்ள உதவிகரமாக அமையும்.
மொத்தத்தில் எம்.எஸ்.எம்.இ-க்கள் ஓடிடி-ஐ வெறும் காட்சிப் பொருளாக இல்லை. அவை உள்ளூர் மட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும், பிராந்திய திறமைகளை வளர்க்கும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மற்றும் ஒரு பரந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.
Share This Article English summary
OTT Trends 2025: A thriving digital economy driving MSMEs and startups in India’s digital economy
The rapidly growing OTT entertainment industry in India is offering various opportunities to MSMEs and startups. Story first published: Sunday, November 9, 2025, 14:59 [IST] Other articles published on Nov 9, 2025