LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! – Allmaa

LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! – Allmaa

  செய்திகள்

LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்!

News oi-Devika Manivannan By Published: Thursday, November 6, 2025, 12:55 [IST] Share This Article

தொலைகாட்சி பெட்டிகள் இல்லாத வீடுகளே இல்லை என கூறும் அளவுக்கு நம் குடும்பங்களின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக டிவிக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் டிவி என்றால் குறிப்பிட்ட சில சேனல்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் ஸ்மார்டி டிவிகளின் வருகையால் நம்மால் யூடியூப், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்றவற்றையும் பார்த்து ரசிக்க முடிகிறது.

குறைந்த வருமானம் கொண்ட வீடுகளில் தொடங்கி எங்கு பார்த்தாலும் எல்இடி டிவிகள் தான் இருக்கின்றன. தற்போது சந்தையிலும் எல்இடி டிவிகள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து முன்னணி பிராண்டுகளால் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில்தான் எல்இடி டிவிகளின் விலை விரைவில் உயரப்போவதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்!

எல்இடி டிவி முக்கியமாக பயன்படுத்தப்படும் ஃபிளாஷ் மெமரிகளின் விலை திடீரென உயர்ந்ததால் டிவிகளின் விலையும் உயரப் போகிறது. ஃபிளாஷ் மெமரிகளுக்கு டிமாண்ட் அதிகரித்ததால் அவற்றின் விலை கடந்து மூன்று மாதத்திலேயே 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறதாம். எனவே இந்த விலை ஏற்றத்தை டிவி உற்பத்தி செய்யக்கூடிய பிராண்டுகள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடிவு செய்திருக்கின்றன.

தற்போது சந்தையில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள் DDR3 மற்றும் DDR4 ஆகிய மெமரிகளை பெருமளவில் உற்பத்தி செய்வதில்லையாம் . இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் அனைத்துமே எஐ டேட்டா மையங்களுக்கு தேவையான சிப் தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. இதன் காரணமாக இத்தகைய மெமரி செட்டுகள் உற்பத்தி என்பது குறைந்துவிட்டது. இதனால் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கு தேவையான மெமரி சிப்புகள் கிடைக்காமல் நிறுவனங்கள் அல்லாடுகின்றன.

Also Readகூகுள் இல்லாமல் இந்தியா இயங்குமா? – ஸ்ரீதர் வேம்பு, ஹர்ஷ் கோயன்கா பதிவால் பரபரப்பு..கூகுள் இல்லாமல் இந்தியா இயங்குமா? – ஸ்ரீதர் வேம்பு, ஹர்ஷ் கோயன்கா பதிவால் பரபரப்பு..

குறைந்த உற்பத்தி அதிக டிமாண்ட் இதன் காரணமாக இந்த சிப்புகளின் விலை என்பது உயர்ந்ததுள்ளது. இது எல்இடி டிவி உற்பத்திக்கான செலவுவை அதிகரித்து இருப்பதாக உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இதுநாள் வரை இந்த மெமரி சிப்புகளை உற்பத்தி செய்ய வந்த பல்வேறு நிறுவனங்களும் தற்போது அதிகரித்துவரும் டேட்டா சென்டர்கள் மற்றும் அதற்கான உயர்திறன் கொண்ட சிப்புகள் தயாரிப்பில் கவனம் செலுத்துகின்றன அதில் தான் இந்த நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபமும் கிடைக்கின்றன என்பதால் எல்இடி டிவிகள் மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களுக்கான சிப்புகளை தயாரிப்பதை நிறுத்தி விட்டன அல்லது குறைத்து விட்டன.

Recommended For YouAI டேட்டா சென்டர்களும்.. தண்ணீர் பிரச்சினையும்..! உலக நாடுகளில் அடுத்தடுத்து நடக்கும் பிரச்சனை..! AI டேட்டா சென்டர்களும்.. தண்ணீர் பிரச்சினையும்..! உலக நாடுகளில் அடுத்தடுத்து நடக்கும் பிரச்சனை..!

எனவே கூடிய விரைவில் எல்இடி தொலைக்காட்சிகளின் விளைவு உயர்வை நம்மால் தடுக்க முடியாது என இந்த துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் 1g/ 8gb மெமரி கொண்ட ஃபிளாஷ் சிப்புகளின் விலை 2.61 அமெரிக்க டாலர்களாக இருந்து அக்டோபரில் 14.40 டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. எனவே இது டிவிக்களின் விலையை உயர்த்தப்போகிறது, பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களுக்கான சிப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயர போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article English summary

Very soon LED televisions to become more expensive, due to AI

LED televisions are likely to become more expensive due to a shortage of flash memory, which has resulted in a huge spike in prices. Story first published: Thursday, November 6, 2025, 12:55 [IST] Other articles published on Nov 6, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *