Gold Rate today: புத்தாண்டில் குட்நியூஸ்.. தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது..! – Allmaa

gold31-1767241324

  செய்திகள்

Gold Rate today: புத்தாண்டில் குட்நியூஸ்.. தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது..!

News oi-Prasanna Venkatesh By Updated: Thursday, January 1, 2026, 9:56 [IST] Share This Article

தங்கம், வெள்ளி விலை 2025ல் மக்களை வாட்டி வதைத்த நிலையில், புத்தாண்டிலாவது மகிழ்ச்சியான செய்தியை அளிக்குமா என சாமானிய மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை இன்றும் அதன் போக்கை தொடரும் என நம்பிக்கை அனைத்தரப்பினர் மத்தியிலும் உள்ளது. இந்த நம்பிக்கை வீணாகவில்லை, தங்கம் விலை ஜனவரி 1ஆம் தேதி அதிரடியாக குறைந்தது

பங்குச்சந்தையில் தீவிரமாக முதலீடு செய்யும் மக்களுக்கும் தற்போது தங்கம், வெள்ளி அவர்களுடைய போர்ட்போலியோவில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இப்படி சமானிய மக்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் தங்கம், வெள்ளி தற்போது முக்கியமான சொத்தாக மாறியுள்ளது.

Gold Rate today: புத்தாண்டில் குட்நியூஸ்.. தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது..!

இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 40 ரூபாய் குறைந்து 12,440 ரூபாயாக உள்ளது, இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 99520 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 2,56,000 ரூபாயாக உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.03 சதவீதம் மட்டுமே சரிந்து பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 1,35,409 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.25 சதவீதம் உயர்ந்து மார்ச் மாதத்திற்கான பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 2,36,301 ரூபாயாக உள்ளது.

2025 ஆம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி-க்கு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக அமைந்தது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) தரவுகளின்படி, உள்நாட்டு ஸ்பாட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.56,727 அல்லது 75 சதவீதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் 31, 2024 அன்று இருந்த ரூ.75,913 இலிருந்து டிசம்பர் 31, 2025 அன்று ரூ.1,32,640 ஆக உயர்ந்தது.

அதேநேரம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,43,601 அல்லது 167 சதவீதம் ஏற்றம் கண்டு உள்ளது. கடந்த ஆண்டு ரூ.85,851 இலிருந்து 2025ஆம் ஆண்டு முடிவில் ரூ.2,29,452 ஆக உயர்ந்தது. இந்த உயர்வு உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் தொழில்துறை தேவையால் ஏற்பட்டது என்பது சந்தை நிபுணர்களின் கருத்து.

தங்கத்தின் வரலாற்று ஏற்றம்
தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. 2025 இல் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் அதிகரிப்பு, அமெரிக்காவின் பணவீக்கக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் உலக அரசியல் பதற்றங்கள் போன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டது. சாமானிய மக்களுக்கு இது தங்க நகைகளை வாங்குவது கனவான மாறிய வருமாக இருந்துள்ளது.

வெள்ளியின் அசாதாரண உயர்வு
வெள்ளி விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் தொழில்துறையில் இதன் தேவை அதிகரித்துள்ளது குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியில் அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளது. இதை தாண்டி சூரிய சக்தி பேனல்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்தது.

இதேவேளையில் உலகளாவிய சந்தையின் தேவைக்கு உற்பத்தியும், விநியோகமும் செய்ய முடியாமல் பற்றாக்குறை உருவானது. இதனால் உலக அளவில் டிமாண்ட் அதிகரித்து இதன் விலை உயர்ந்தது. 2025ல் தங்கம், வெள்ளி உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருந்த அனைத்தும் 2026லும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இதன் விலை உயரும் போக்கிலேயே இருக்கும், என்றாலும் 2025ல் பதிவான அதிரடியான உயர்வுகள் கட்டாயம் இருக்காது.

Share This Article English summary

Gold Rate today: Good news on Jan 1- Gold Price fall below 1 lakh today- Check 22k, 24K, 18K price

Gold Rate today: Good news on Jan 1- Gold Price fall below 1 lakh today- Check 22k, 24K, 18K price Story first published: Thursday, January 1, 2026, 9:52 [IST]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *