Breaking: சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..!
செய்திகள் சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 14:42 [IST] Share This Article சமூக வலைத்தளங்களில் திடீரென சில விஷயங்கள் டிரெண்டாகி லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெறும். அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார்.மயிலாடுதுறை மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது. இங்கே நெல், கரும்பு, வாழை , நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அள்ளிவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜன் என்பவர் தான் விளைவித்த மரவள்ளிக் கிழங்குகளை சொகுசு காரில் எடுத்து வந்து விற்பனை செய்து கவனம் பெற்றிருக்கிறார்.மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா காரில் பின்பக்கத்தில் அவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த மரவள்ளிகிழங்குகளை வைத்து விற்பனை செய்யும்…
