இயற்கையை ரசிக்க மலை உச்சிக்கு சென்ற 4 இளைஞர்கள், கீழே இறங்க முடியாமல் இரவு முழு வதும் பரிதவித்தனர்.
இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கண்ணனூர் விளாகத்தை சேர்ந்தவர் ஜெபவிஜி (வயது 25). இவருடைய நண் பர்கள் வலியவிளையை சேர்ந்த பிரவீன் (23), வர்த்தான்விளையை சேர்ந்த ஜான் கிப்சன் (23), சரல்விளையை சேர்ந்த ஜேக்சன் (23). இவர்கள் + பேரும் நேற்று முன்தினம் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கிருந்து அருகில் உள்ள வேளிமலையின் தொடர்ச்சியான மந்தேரி மலைக்கு…
