Budget 2026: சுத்தமான காற்றுக்கும் தண்ணீருக்கும் எத்தனை கோடிகள்? வருங்கால சந்ததிக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு?! – Allmaa

befunky-collage5-1769323703

  செய்திகள்

Budget 2026: சுத்தமான காற்றுக்கும் தண்ணீருக்கும் எத்தனை கோடிகள்? வருங்கால சந்ததிக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு?!

News oi-Pugazharasi S By Published: Sunday, January 25, 2026, 12:18 [IST] Share This Article

பணம் இருந்தால் எதையும் வாங்கலாம் என்பார்கள், ஆனால், சுவாசிக்க சுத்தமான காற்றும், குடிக்க தூய்மையான நீரும் காசு கொடுத்தால் கிடைத்துவிடுமா என்ன? இதோ 2026ம் ஆண்டு மத்திய பட்ஜெட் இந்த எதார்த்தமான கேள்வியை நோக்கி திரும்பியிருக்கிறது.
வெறும் எண்களை மட்டுமே பேசும் பட்ஜெட்டாக இல்லாமல், நம் நுரையீரலுக்கும். தாகத்திற்கும் உயிர் கொடுக்கும் ஒரு பசுமைப் புரட்சியாக இந்த பட்ஜெட் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்றைய சேமிப்பு, நாளைய சந்ததிக்கு என்பது போய், இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தான், நாளைய தலைமுறைக்கான உண்மையான சொத்து என்ற நோக்கில், பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டெல்லி போன்ற மாசுபட்ட நகரங்களில் மீண்டும் வசந்தத்தை கொண்டு வரவும், ஒவ்வொரு வீட்டிற்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கவும் பட்ஜெட்டில் காத்திருக்கும் அந்த கிளீன் அப்டேட்ஸ் பற்றி விரிவாக பார்ப்போம்..

சுத்தமான காற்றுக்கும் தண்ணீருக்கும் எத்தனை கோடிகள்? வருங்கால சந்ததிக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு?!

பட்ஜெட் 2026: காற்று மற்றும் நீருக்கான நிதி ஒதுக்கீடு?
இந்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த நிதியாண்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காற்று மாசு மற்றும் நீர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டெல்லி போன்ற மாசடைந்த நகரங்களை தூய்மைப்படுத்த தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் மூலம், 2026ல் நகரங்களில் காற்று மாசை 40% குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசிடம் இருந்து கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பலத்த எதிர்பார்ப்பானது இருந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு கடந்த 2019 – 20ம் நிதியாண்டு முதல் 2024 – 24 வரையில் 131 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த சுமார் 9,650 கோடி நிதியானது வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வரவிருக்கும் பட்ஜெட்டில் மிகப்பெரிய மறைமுக அரக்கனாக இருந்து வரும் காற்று மாசை குறைக்க, மத்திய அரசு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யலாம்.

குறிப்பாக சோலார் மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் காற்று மாசை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படலாம்.

நீருக்காக எவ்வளவு?

ஒரு காலத்தில் ஊருக்கு ஒன்றிரண்டு குழாய்களில் தண்ணீர் அடித்து பிடித்து வந்த மக்கள், தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது ஜல் ஜீவன் மிஷன் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதை மேம்படுத்த இன்னும் கூடுதல் நிதியானது நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்படலாம்.

வெள்ள மேலாண்மை திட்டம்?

கடந்த சில ஆண்டுகளாகவே சில முக்கிய நகரங்கள் மற்றும் பல இடங்களில் வெள்ளப் பாதிப்புகளால் கடும் சவால்களை எதிர்கொண்டன. இதற்கு முக்கியமாக சரியான வடிகால் அமைப்பு இல்லாததே காரணமாகவும் பார்க்கப்பட்டது.

முக்கிய அறிவிப்புகள் என்னவாக இருக்கும்?

 பெட்ரோல், டீசல் புகையை குறைக்க மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) பேட்டரி உற்பத்திக்கான மானியங்கள் அதிகரிக்கப்படலாம்.
 அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் தொழிற்சாலைகளுக்கு கார்பன் வரி (Carbon Tax) விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 நிலத்தடி நீர் பாதுகாப்பு: வறட்சியை சமாளிக்க நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 கழிவுநீர் சுத்திகரிப்பு: ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட, புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கத் திட்டம்.

Share This Article English summary

Budget 2026: How much is the government investing in the air we breathe and the water we drink?

Budget 2026 may allocate significant funds for sustainability, Jal Jeevan Mission and expanded outlays for clean air initiatives and green energy. Story first published: Sunday, January 25, 2026, 12:18 [IST] Other articles published on Jan 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *