Breaking: PF பணத்தை யுபிஐ மூலம் எடுத்து பயன்படுத்தலாம்!! பொங்கல் நன்னாளில் EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

pf21-1768618960

  செய்திகள்

PF பணத்தை யுபிஐ மூலம் எடுத்து பயன்படுத்தலாம்!! பொங்கல் நன்னாளில் EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

News oi-Devika Manivannan By Published: Saturday, January 17, 2026, 8:34 [IST] Share This Article

இந்தியாவில் கோடிகணக்கானவர்களின் பிஎஃப் கணக்கினை மேலாண்மை செய்து வரக்கூடிய ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ வாயிலாக எடுக்கக்கூடிய வசதியை கொண்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் எனப்படும் ஈபிஎஃப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொழிலாளருக்கும், ஊழியருக்கும் பிஎஃப் கணக்கு தொடங்கப்படுகிறது. ஊழியர் சார்பாகவும் அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனம் சார்பாகவும் மாதந்தோறும் ஒரு தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்த பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு சார்பில் வட்டியும் வழங்கப்படுகிறது.

PF பணத்தை யுபிஐ மூலம் எடுத்து பயன்படுத்தலாம்!! பொங்கல் நன்னாளில் EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவின் மிகச்சிறந்த ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த பிஎஃப் திட்டத்தின் கீழ் நாம் நம்முடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஓய்வு காலத்தில் தான் எடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நமக்கு ஏதேனும் ஒரு அவசர பண தேவை ஏற்படுகிறது எனும் போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு பல்வேறு செயலாக்க நடைமுறைகள் இருக்கின்றன. அத்தனை எளிதாக பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விட முடியாது. ஆன்லைனில் இதற்காக விண்ணப்பம் செய்ய வேண்டும் குறிப்பிட்ட சில ஆவணங்களை தாக்கல் செய்தாக வேண்டும். இதன் பிறகு அதிகாரிகள் ஆய்வு செய்து உங்களுக்கு பணத்தை வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவினை எடுப்பார்கள்.

Also ReadEPFO: ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச சேவை!! இந்தநம்பருக்கு டயல் பண்ணா அதிகாரிகளே தேடி வருவாங்க!!EPFO: ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச சேவை!! இந்தநம்பருக்கு டயல் பண்ணா அதிகாரிகளே தேடி வருவாங்க!!

ஆனால் கூடிய விரைவில் பிஎஃப் பணத்தை யுபிஐ வழியாகவே எடுத்து கொள்ளக் கூடிய வசதி கொண்டு வரப்படுவதாக ஈபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ பேமென்ட் கேட்வே வழியாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்திருக்கிறார்கள்.

பிஎஃப் கணக்கில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தை நம்முடைய வங்கி கணக்கு வாயிலாக நேரடியாக யுபிஐ மூலமே எடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறதாம். சந்தாதாரர்களுக்கு அவருடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது அதில் எவ்வளவு பணத்தை எடுக்க முடியும் என்பன உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தெரிவிக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

Recommended For You2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

தற்போது இதற்கான தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகளை சரி செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது நடைமுறைக்கு வந்துவிட்டால் கிட்டதட்ட 8 கோடி பேர் இதன் மூலம் பலன் பெறுவார்கள். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக வங்கிக்கணக்கு மாற்றம் செய்யவும், பின்னர் அதனை யுபிஐ வாயிலாக அல்லது ஏடிஎம் வாயிலாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share This Article English summary

EPFO to Enable UPI-Based EPF Withdrawals by April 2026

EPFO members will soon withdraw eligible EPF balances directly to bank accounts via UPI by April 2026, using linked UPI PINs for secure transfers, bypassing time-consuming claim applications. Story first published: Saturday, January 17, 2026, 8:34 [IST] Other articles published on Jan 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *