MGNREGA Vs VB-G RAM G: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் என்னென்ன மாற போகிறது?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 18, 2025, 17:18 [IST] Share This Article
கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு ஓராண்டுக்கு குறைந்தபட்ச வேலையையும் குறைந்தபட்ச வருமானத்தையும் உறுதியளிக்க கூடிய ஒரு திட்டமாக தான் இது பயன்பாட்டுக்கு வந்தது.
இதன்படி குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு ஆவது வேலை வழங்கப்பட்டு அவர்களுக்கு வருமானம் உறுதி செய்யப்பட்டது . இந்த சூழலில் மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என பெயர் மாற்றம் செய்திருக்கிறது.

இது தவிர இந்த திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம் மற்றும் பல்வேறு பிரிவுகளை மாற்றி அமைத்துள்ளதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால் தற்போது உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டமே பெரிய அளவில் மாற்றம் காணும். அதாவது இந்த திட்டத்திற்கு மாற்றாக புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்.
Also Read
காப்பீட்டு துறையில் புரட்சியா 100% அந்நிய நேரடி முதலீடு? மக்களுக்கு என்ன பலன்? பிரீமியம் குறையுமா?
அரசின் விக்ஷித் பாரத் 2047 என்ற இலக்குக்கு இணங்க இந்த திட்டத்தை மாற்றி அமைத்து இருப்பதாக அரசு கூறுகிறது.இதற்கு முன்பு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற உறுதி இருந்த நிலையில் தற்போது அது ஒரு நிதி ஆண்டுக்கு 125 நாட்கள் என உயர்த்தப்பட்டிருக்கிறது . எனவே கிராமப்புறங்களை செய்பவர்களுக்கு இனி ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 125 நாட்களுக்கு கட்டாயம் வேலை கிடைக்கும்.
மேலும் இந்த பிரிவின்படி அவர்களுக்கான சம்பளத்தொகை என்பது வாராந்திர அடிப்படையில் அல்லது வேலை முடித்த அன்றைய நாளுக்குள்ளேயே வழங்கப்பட்டு விடும் . நீர் சம்பந்தப்பட்ட திட்டங்கள், கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களான சாலைகள் மற்றும் இணைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Recommended For You
புத்தியை காட்டும் சீனா!! எல்லையில் மீண்டும் குடைச்சல்!! இந்தியாவுக்கு புதிய சிக்கல்!!
இதற்கு முன்பு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான செலவுகளை 100% மத்திய அரசுதான் வழங்கி வந்தது. ஆனால் தற்போது இது மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டிருக்கிறது . எனவே இந்த திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும் 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
இது மட்டுமில்லாமல் வேளாண் பருவ காலங்களில் 60 நாட்கள் வேலை இல்லாமல் இருக்கலாம் என்ற ஒரு பிரிவும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது வேளாண் அறுவடை காலங்களில் அந்த பணிகளுக்கு கூடுதல் ஆட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என மசோதா கூறுகிறது.
Share This Article English summary
From 100 to 125 Days: Viksit Bharat Bill Boosts Wages, Pauses Peak Farm Seasons
The Viksit Bharat G-RAM G Bill 2025 replaces MGNREGA with enhanced rural employment guarantees. It aligns rural jobs with Viksit Bharat 2047 vision, focusing on durable assets and accountability Story first published: Thursday, December 18, 2025, 17:18 [IST] Other articles published on Dec 18, 2025
