AI-க்கும் டாய்லெட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஜப்பானின் டோடோ நிறுவனத்தில் குவியும் முதலீடுகள்..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 15:03 [IST] Share This Article
உலகமே ஏஐ குறித்து தான் பேசுகிறது. எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த தகவல்கள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. முதலீட்டாளர்கள் மத்தியில் ஹாட்டான பங்குகளை ஏஐ பங்குகள் தான் முதலிடத்தில் இருக்கின்றன.
ஏஐ சிப்புகள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஏஐ சிப்களுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், டேட்டா மையங்களை கொண்ட நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை தருகின்றன. அந்த வகையில் உலக முதலீட்டாளர்கள் மத்தியில் ஏஐ பிரிவில் ஜப்பானின் டாய்லெட் பொருட்களை தயாரிக்கும் நிறுவன பங்கு தான் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்துக்கும் டாய்லெட் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஆனால் அதில் தான் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனம் தான் டோடோ. பல ஆண்டுகளாக இந்த நிறுவனம் கழிவறை மற்றும் குளியலறைகள் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்த நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய லாபத்தை இந்த ஆண்டு பெற்றிருக்கிறது. இந்த நிறுவனம் வாஷ்பேஷன், ஷவர், டாய்லெட் இருக்கை உள்ளிட்டவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. பல்வேறு செராமிக் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இத்துடன் ஒரு சைடு பிஸ்னஸும் செய்கிறது. அந்த பிஸ்னஸ் தான் இந்நிறுவன பங்கு பெருமளவு உயர காரணமாகியுள்ளது.

தன்னுடைய பாரம்பரியமான குளியலறை பொருட்கள் தயாரிப்பை விட ஏஐ வளர்ச்சியால் இந்த நிறுவனத்திற்கு பல மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40% உயர்ந்திருக்கிறது. தற்போது பெரிய பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தேடி தேடி டோட்டோ நிறுவன பங்குகளில் முதலீடு செய்கின்றன. இதற்கு இந்த நிறுவனத்தின் சைட் பிசினஸ் தான் முக்கிய காரணம்.
Also Read
சுந்தர் பிச்சையே தேடி வந்து பேசிய 8 வயது இந்திய சிறுவன்!! ஏஐ மாநாட்டை கலக்கிய ரன்வீர் சச்தேவா!!
தற்போது உலக அளவில் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதற்கு ஏற்ப செமி கண்டக்டர் எனப்படும் சிப்கள் தேவை பல மடங்கு பெருகி இருக்கிறது. இவ்வகை சிப்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் சிப் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த சிப் உற்பத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் செராமிக் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கான செராமிக்கை உற்பத்தி செய்வதை சைடு பிஸ்னஸாக கொண்டுள்ளது டோடோ. தற்போது இதுதான் இந்த நிறுவனத்திற்கு அதிக அளவு வருமானத்தை ஈட்டி தருகிறதாம். பாரம்பரியமான தங்களுடைய குளியலறை தயாரிப்பு பொருட்களை தாண்டி சிப்களுக்கான செராமிக் பாகங்களை தயாரித்து வழங்குவதன் மூலம் இந்த நிறுவனம் அதிக வருமானம் ஈட்ட தொடங்கி இருக்கிறது.
Recommended For You
சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்: விறுவிறுப்பாக நடக்கும் பணி!! ஃபாக்ஸ்கானின் அடுத்த சர்ப்பிரைஸ்!!
தற்போது இந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 40% இந்த சைடு பிசினஸில் இருந்தே வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நிலையில் அடுத்த பெரிய அளவு வளர்ச்சி அடையக்கூடிய ஒரு பங்காக டோட்டோ நிறுவனத்தின் பங்கு இருக்கும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முதலீட்டாளர்கள் இது போன்ற நிறுவனங்களை தேர்வு செய்வது தான் சாமர்த்தியம் என்கின்றனர் முதலீட்டு நிபுணர்கள். இந்தியாவில் கூட அஜினோமோட்டோ தயாரிக்கும் எம்எஸ்ஜி நிறுவனம் சிப் தயாரிக்கான உபகரணங்களை உற்பத்தி செய்து பெரிய லாபம் ஈட்டுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Toto: Toilet Giant Emerges as Hidden AI Ceramics Leader in Chip Boom
Many investors are flocking Japan’s Toto, famous for heated toilet seats, labeling it the most undervalued AI beneficiary for its electrostatic chucks (ESCs) used in memory chip manufacturing. Story first published: Saturday, February 21, 2026, 15:03 [IST] See More On: ஏஐ, ai, பங்கு சந்தை, stock market Other articles published on Feb 21, 2026
