42% லாபம் தர ரெடி! தரகு நிறுவனம் கொடுத்த கிரீன் சிக்னல்..போர்ட்ஃபோலியோவில் இந்த 3 பங்குகள் இருக்கா?
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 28, 2026, 19:14 [IST] Share This Article
பங்குச்சந்தை ஒருபுறம் ஏற்ற இறக்கங்களுடன் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டினாலும், மறுபுறம் சில தரமான பங்குகள் ஜாக்பாட் லாபத்திற்கு தயாராகி வருகின்றன. இந்த சூழலில் தான் பிரபல தரகு நிறுவனமானது தற்போதுள்ள சந்தை சூழலிலும் முதலீட்டாளர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் 3 முக்கிய பங்குகளை வாங்கலாம் என்ற சாதகமான ரேட்டிங்கை கொடுத்துள்ளது. அதுவும் வெறும் 5 அல்லது 10 சதவீத லாபமல்ல, 42% வரை எகிறக்கூடிய வலிமை கொண்ட பங்குகள் என கூறியுள்ளது. அது ஐடி (IT), கெமிக்கல் மற்றும் ரீசைக்கிளிங் ஆகிய துறைகளில் முன்னணியில் உள்ள பங்குகளாகவும் உள்ளன. சந்தை இறங்கும் போது வாங்குவதே புத்திசாலித்தனம் எனும் முதலீட்டு மந்திரத்தின் படி, உங்கள் போர்ட்ஃபோலியோவை லாபகரமாக மாற்றப்போகும் அந்த 3 சிறந்த பங்குகள் எவை? அவற்றின் இலக்கு விலை என்ன? ஒரு விரிவான அலசல் இதோ..
பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், தனிப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் அவற்றின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், தற்போது மூன்று முன்னணி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவற்றை வாங்க பரிந்துரைத்துள்ளது.

ஜென்சார் டெக்னாலஜிஸ் (Zensar Technologies)
ஐடி சேவைத் துறையில் முன்னணியில் உள்ள ஜென்சார் நிறுவனத்திற்கு வாங்கலாம் (Buy) என ரேட்டிங்கை மோதிலால் ஓஸ்வால் வழங்கியுள்ளது. இது அதன் இலக்கு விலையை 1,000 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இப்பங்கானது தற்போதைய விலையிலிருந்து சுமார் 42% உயர வாய்ப்புள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது.
தரகு நிறுவன அறிக்கையின் படி, ஜென்சார் நிறுவனத்தின், 2026 நிதியாண்டின் 3வது காலாண்டில் வருவாய் 1.3% சரிந்திருந்தாலும், இது நிபுணர்களின் கணிப்பை விட (1.7% சரிவு) சிறப்பான செயல்பாடாகும். இருப்பினும் நிறுவனத்தின் லாப வரம்பு 16% ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு பணப் பரிமாற்ற லாபம் மற்றும் செயல்பாட்டு திறனால் லாபம் 219.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 179.8 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுல் லிமிடெட் (Atul Ltd)
கெமிக்கல் துறையில் பன்முகத்தன்மை கொண்ட அதுல் நிறுவனத்தின் பங்கை வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், இலக்கு விலையானது சந்தை விலையில் இருந்து சுமார் 29% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இலக்கு விலையை 7,500 ரூபாயாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுல் நிறுவனத்தின் நிதி நிலவரத்தை பார்க்கும்போது, டிசம்பர் காலாண்டில் வருவாய் 11% வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக பெர்பாமன்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் லைஃப் சயின்ஸ் கெமிக்கல்ஸ் பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அதன் வரிக்கு பிந்தைய லாபம் 74% என்ற அளவில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்க திட்டங்கள் மற்றும் வருவாய் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, 2026ம் நிதியாண்டு, 2027ம் நிதியாண்டு, 2028ம் நிதியாண்டுகளில் முறையே 9% மற்றும் 5%, 11% அளவுக்கு வளர்ச்சி காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிராவிடா இந்தியா (Gravita India)
மறுசுழற்சி துறையில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பங்கை வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், இலக்கு விலையை சந்தை விலையில் இருந்து 31% அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தரகு நிறுவனமானது கணித்துள்ளது. இலக்கு விலையை 2,030 ரூபாயாகவும் கொடுத்துள்ளது.
தரகு நிறுவன அறிக்கையின் படி, கிராவிடாவின் கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 2% மட்டுமே உயர்ந்துள்ளது. விற்பனை அளவு சற்று குறைந்திருந்தாலும், லாப திறன் அதிகரித்துள்ளது.
எபிடா வளர்ச்சியானது கடந்த ஆண்டை காட்டிலும் 14% உயர்ந்து, 120 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனிடையே தான் வரவிருக்கும் காலாண்டுகளில் இப்பங்கு விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Which 3 stocks is Motilal Oswal betting on for a massive 42% rally? Is your portfolio ready?
Motilal Oswal recommends buying Zensar, Atul, and Gravita India, citing strong Q3FY26 margins and growth visibility, with Zensar offering the highest potential upside of 42%. Story first published: Wednesday, January 28, 2026, 19:14 [IST] Other articles published on Jan 28, 2026
