Breaking: 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

goldf73-1767872198

  பர்சனல் பைனான்ஸ்

2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

Personal Finance oi-Devika Manivannan By Published: Thursday, January 8, 2026, 17:09 [IST] Share This Article

2025இல் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி பெருமளவில் லாபம் தருபவையாக மாறின. 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இதேபோல வளருமா வெள்ளியின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆழ்ந்திருக்கிறது.

2025 ஆம் ஆண்டில் மற்ற உலோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் பெரிய லாபம் தரும் முதலீடாக மாறியதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அரசின் வர்த்தக மோதல், அமெரிக்க பொருளாதார சூழல் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கத்தை வாங்கி குவித்தது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டிலும் இதே போன்ற சூழல்கள் ஏற்பட்டால் நிச்சயம் அதே போல தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இரண்டு நாட்கள் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது நான்கு நாட்கள் தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது . மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை குறைக்கும் போது அதற்கான டிமாண்ட் குறைந்து தங்கத்தின் விலை குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2025இல் மட்டும் பல்வேறு நாடுகளின் வங்கிகள் சுமார் 900 டன்கள் வரை தங்கத்தை வாங்கி இருக்கின்றன என்கிறார் தனியார் முதலீட்டாளரான நரேஷ் கட்டாரியா.

யார்தேனி ரிசர்ச் அமைப்பின் தலைவர் ஆன எட்வர்டு யார்தேனி 2024 ஆம் ஆண்டில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2000 டாலர்களை கடந்தது அதன் பிறகு தான் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர தொடங்கியது என கூறுகிறார். இதற்கு முன்பு ஒரு தூங்கக்கூடிய சொத்தாக கருதப்பட்ட தங்கம் தற்போது வேகம் எடுத்து ஓடக்கூடிய ஒரு குதிரையாக பார்க்கப்படுகிறது என கூறுகிறார்.

ஏராளமானவர்கள் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் இருந்த முதலீடுகளை எல்லாம் எடுத்து தங்கத்தின் மீது போட்டுவிட்டார்கள் என தெரிவிக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6000 டாலர்களை எட்டும் என அவர் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். இன்றைய தினத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை உலக சந்தையில் 4,428 டாலர்களாக இருக்கிறது. அப்படி பார்க்கும்போது தற்போதுள்ள விலையை விட தங்கத்தின் விலை 35 சதவீதம் உயரும் என்பது இவருடைய கணிப்பாக இருக்கிறது.

Also Readஇப்போ தொடங்குனா கூட விட்டத பிடிச்சிடலாம்!! 2026இல் முதலீட்டு பயணத்தை தொடங்குவதை எப்படி?இப்போ தொடங்குனா கூட விட்டத பிடிச்சிடலாம்!! 2026இல் முதலீட்டு பயணத்தை தொடங்குவதை எப்படி?

ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28.34 கிராம்கள் ஆகும். அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,39,547 ரூபாயாக மாறும் என்பது இவருடைய கணிப்பு. இதையே கிராம அடிப்படையில் வைத்து நாம் பார்க்கும் போது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் இந்த ஆண்டு இறுதிக்குள் 19,000 ரூபாயை எட்டி விடும்.

அதுவே 2030-ம் ஆண்டுக்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 10,000 டாலர்களை எட்டி விடக்கூடும் என்றும் இவர் கணிக்கிறார். எனவே பத்தாயிரம் டாலர்கள் எனும் போது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 8.99 லட்சம் ரூபாய். அப்படி பார்த்தால் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 30,000 ரூபாயை எட்ட கூடும். தற்போது உள்ள விலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதே இவருடைய கணிப்பாக இருக்கிறது.

Recommended For Youவீட்டு கடன் வாங்க போறீங்களா? வெயிட்!! இந்த ஒரு டிரிக் தெரிஞ்சா பல லட்சங்களை சேமிக்க முடியும்!!வீட்டு கடன் வாங்க போறீங்களா? வெயிட்!! இந்த ஒரு டிரிக் தெரிஞ்சா பல லட்சங்களை சேமிக்க முடியும்!!

வெள்ளியும் அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு ஏறுமுகமாக தான் இருக்கும் என்கிறார் கமாடிட்டி எக்ஸ்பர்ட் அனுஜ் குப்தா. தொழில் துறை ரீதியாக வெள்ளிக்கான தேவை அதிகரித்து இருக்கிறது ஆனால் வெள்ளிக்கான சப்ளை குறைவாக இருக்கிறது இது நிச்சயமாக வெள்ளியின் விலையை உயர்த்தும் எனக் கூறுகிறார். முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்போலியோவில் 20 சதவீதம் வரை தங்கம் மற்றும் வெள்ளிக்காக ஒதுக்கீடு செய்யலாம் என அவர் அறிவுரை வழங்குகிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Gold’s Bull Run to 2030: Year-End 2026 Targets and Long-Term Forecasts

By December 2026, optimistic forecasts point to gold reaching $6,000 per ounce, and $10,000 by 2030. Story first published: Thursday, January 8, 2026, 17:09 [IST] Other articles published on Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *