Breaking: 2026ல் ஜாக்பாட் அடிக்குமா?போரிஞ்சு வெலியத் & மதுசூதன் கேலா வாங்கிய 2 புதிய ஸ்மால்கேப் பங்குகள்!

befunky-collage-2026-01-20t171433-793-1768909654

  Market update

2026ல் ஜாக்பாட் அடிக்குமா?போரிஞ்சு வெலியத் & மதுசூதன் கேலா வாங்கிய 2 புதிய ஸ்மால்கேப் பங்குகள்!

Market Update oi-Pugazharasi S By Published: Tuesday, January 20, 2026, 17:17 [IST] Share This Article

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வைரம் யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் ஒரு தேர்ந்த வைர வியாபாரிக்கு அது துல்லியமாகத் தெரியும். பங்குச் சந்தையில் அத்தகைய வைர வியாபாரிகள் தான் போரிஞ்சு வெலியத் மற்றும் மதுசூதன் கேலா. சாதாரணப் பங்குகளை தேடி அலையும் கூட்டத்திற்கு மத்தியில், வருங்காலத்தில் பல மடங்கு லாபம் தரும் மல்டிபேக்கர் பங்குகளை தேடிப் பிடிப்பதில் அவர்கள் கில்லாடிகள்.

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஒட்டு மொத்த முதலீட்டு உலகமும், சந்தையின் ஏற்ற இறக்கத்தை கண்டு அஞ்சி கொண்டிருக்கும் போது, இந்த இரண்டு ஜாம்பவான்களும் மிகவும் அமைதியாக இரண்டு புதிய ஸ்மால்-கேப் பங்குகளை தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துள்ளனர்.

2026ல் ஜாக்பாட் அடிக்குமா?போரிஞ்சு வெலியத் & மதுசூதன் கேலா வாங்கிய 2 புதிய ஸ்மால்கேப் பங்குகள்!

மதுசூதன் கேலா நிதிச் சேவை துறையில் ஒரு ப்ராக்ஸி பிளேவாக இருக்கும் (Proxy Play) எம்கே குளோபல் பைனான்ஷியல் சர்வீசஸ் (Emkay Global Financial Services ) நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். போரிஞ்சு வெலியத் தனது தனித்துவமான பாணியில், மதுபான நிறுவனமான ஐஎம்எஃப்எல் (IMFL (Indian Made Foreign Liquor) பங்குகளை தட்டி தூக்கியுள்ளார்.

இது வெறும் சாதாரண முதலீடு அல்ல; 2026-ன் பொருளாதார மாற்றங்களை முன்கூட்டியே கணித்து அவர்கள் செய்திருக்கும் ஒரு மாஸ்டர் மூவ் ஆக பார்க்கப்படுகிறது. அவர்கள் ஏன் இந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்தார்கள்? இந்தப் பங்குகளுக்குள் ஒளிந்திருக்கும் அந்த லாப ரகசியம் என்ன? ஒரு சாதாரண முதலீட்டாளராக நீங்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள், 2026-ன் இந்த ஜாக்பாட் வாய்ப்புகளை பார்ப்போம்.

எம்கே குளோபல் பைனான்ஷியல்

எம்கே குளோபல் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனமானது 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கேபிடல் மார்க்கெட் சேவைகளை வழங்கி வரும் நிறுவனமாகும். இதன் சந்தை மூலதனம் 750 கோடி ரூபாயாகும். இது ஒரு ப்ராக்ஸி பிளே பங்காக கருதப்படக் காரணம், இந்திய பங்குச் சந்தையானது வளரும் போது, இந்த நிறுவனத்தின் சேவைகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இது பலதரப்பட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கவும், விற்கவும் தேவையான ஆராய்ச்சி மற்றும் தரகு சேவைகளையும் வழங்குகிறது. பெரும் பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்களின் முதலீடுகளையும் நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தனிநபர் முதலீட்டாளர்களுக்கு நிதி ஆலோசனை மற்றும் முதலீட்டு திட்டங்களை வகுத்து கொடுத்தல், நிறுவனங்கள் பங்குச் சந்தைக்கு வருவதற்கும், நிதி திரட்டுவதற்கும் ஆலோசனை வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

இப்பங்கை மதுசூதன் போன்ற முதலீட்டாளர்கள் தேர்வு செய்ய காரணம், மற்ற பெரிய புரோக்கிங் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இதன் பங்குகள் மலிவான விலையில் கிடைப்பதாக கருதப்படுகிறது. அதோடு வலுவான ஆராய்ச்சித் திறன், பங்குச்சந்தையில் அதிகரித்து வரும் ஆர்வம், சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புரோக்கிங் நிறுவனங்களின் வருவாய் உயரும் என்ற நம்பிக்கை என பல காரணிகளுக்கு மத்தியில் இருக்கலாம். மதுசூதன் கேலா தனது மனைவி மஹி மதுசூதன் வசம் எம்கே குளோபல் நிறுவனத்தில் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, 1.12% பங்குகளை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு 8 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். டோலி கண்ணா வசம் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி 2.31% பங்கும் உள்ளது. இது முந்தைய காலாண்டில் 2.73% இருந்தது குறிப்பிடத்தக்கது. சஞ்சீவ் ஷா வசம் 1.44% பங்குகளும் உள்ளது.

இதன் நிதி நிலவரத்தை பார்க்கும்போது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் 16.89% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள் வசம் 72% பங்குகளை வைத்துள்ளனர். இது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.

விற்பனை வளர்ச்சியை பார்க்கும் போது 2020ம் நிதியாண்டில் 135 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2025ம் நிதியாண்டில் 360 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 145 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் எபிடா 3 கோடி ரூபாயில் இருந்து 79 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 7 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது. நிகர லாபம் 13 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்து 2025ம் நிதியாண்டில் 57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இருப்பினும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 5 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 88% சரிவாகும். தற்போது இப்பங்கின் விலையானது 290 ரூபாயாகும். இது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 419 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. குறுகிய காலத்தில் இந்த நிறுவனத்தில் பல சவால்கள் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என முதலீட்டாளர் நினைக்கிறார்.

ஐஎம்எஃப்எல் (IMFL)

இந்தியாவில் வெளிநாட்டு முறையிலான மதுபானங்கள் என்றாலும், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுபவை. மதுபானம் தவிர, பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலையும் அவர்கள் பெருமளவில் உற்பத்தி செய்கிறார்கள். மேலும் ஹேன்ட் சானிடைஷர் போன்றவற்றையும் தயாரிக்கிறது. இது இவர்களுக்கு ஒரு நிலையான வருவாயை தருகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,578 கோடி ரூபாயாகும். மத்திய பிரதேசத்தில் கணிசமான இருப்பைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானம் (IMFL) மற்றும் இந்திய தயாரிப்பு உள்நாட்டு மதுபானம் (IMIL) ஆகியவற்றில் 20 – 25% பங்கு வகிக்கிறது. மேலும் கேரளாவில் உள்ள முதல் 5 IMFL நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. உலகின் முதல் ஒயிட் பிராந்தி தயாரிப்பாளராகவும் உள்ளது.

இந்த நிறுவனத்தில் தான் போரிஞ்சு வெலியத் டிசம்பர் காலாண்டில் சுமார் 1.05% பங்குகளை, தனது ஹோல்டிங் நிறுவனமான ஈக்விட்டி இன்டெலிஜென்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் வாங்கியுள்ளார். அதற்கான காரணங்களை பார்க்கும்போது, அதன் விற்பனை வளர்ச்சியானது 2020ம் நிதியாண்டில் 523 கோடி ரூபாயாகவும், இது 2025ம் நிதியாண்டில் 1,075 கோடி ரூபாயாகவும் 16% வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 521 கோடி ரூபாயாகவும் பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் எபிடா வளர்ச்சி 78 கோடி ரூபாயில் இருந்து, 128 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இது நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 61 கோடி ரூபாயாகவும் பதிவு செய்துள்ளது. நிகர லாபமானது 49 கோடி ரூபாயில் இருந்து 81 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 38 கோடி ரூபாயாகவும் பதிவு செய்துள்ளது.

இந்த சூழலில் இப்பங்கானது 833 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. இது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 44% சரிவில் காணப்படுகிறது. மேற்கண்ட இரு நிறுவனங்களுமே கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக, முதலீட்டாளர்கள் கவனித்து, சரியான வாய்ப்பு கிடைக்கும்போது நிபுணர்களின் ஆலோசனையுடன் திட்டமிடலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

2 New Small-Cap Gems Picked by Porinju Veliyath and Madhusudan Kela for 2026

Ace investors Porinju Veliyath and Madhusudan Kela have added IMFL liquor firm and Emkay Global to their 2026 portfolios, betting on India’s booming retail broking and financial services sector. Story first published: Tuesday, January 20, 2026, 17:17 [IST] Other articles published on Jan 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *