Breaking: 2025ல் ஒரு பவுன் தங்கம் 1 லட்சத்தை தொட்டது.. 2026ல் என்னாகும்? வந்தது லேட்டஸ்ட் அப்டேட்..!

befunky-collage-2025-12-31t114643-656-1767161849

  செய்திகள்

2025ல் ஒரு பவுன் தங்கம் 1 லட்சத்தை தொட்டது.. 2026ல் என்னாகும்? வந்தது லேட்டஸ்ட் அப்டேட்..!

News oi-Pugazharasi S By Published: Wednesday, December 31, 2025, 11:47 [IST] Share This Article

நகைக் கடை பக்கம் போகவே பயப்படும் அளவுக்கு தங்கம் விலையானது விண்ணைத் தொட்டு வருகிறது. குறிப்பாக ஒரு சவரன் தங்கம் லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், இனி தங்கமே வாங்க முடியாதா? என்ற கவலையானது பாமர மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில் 2026ம் ஆண்டில் ஆவது தங்கம், வெள்ளி விலை குறையுமா அல்லது மீண்டும் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே 2026ம் ஆண்டில் என்னவாக போகிறது, நிபுணர்கள் கூறுவது போல் தங்கம், வெள்ளி விலையானது மீண்டும் ஆர்வலர்கள் வாங்க முடியாத அளவுக்கு ஏற்றம் கண்டு விடுமோ என்ற பயமும் இருக்கிறது. உண்மையில் அவற்றின் விலை போக்கானது எப்படி இருக்கும், வாருங்கள் பார்க்கலாம்.

2025ல் ஒரு பவுன் தங்கம் 1 லட்சத்தை தொட்டது.. 2026ல் என்னாகும்? வந்தது லேட்டஸ்ட் அப்டேட்..!

தங்கம், வெள்ளி அவுட்லுக் 2026

நடப்பு ஆண்டில் தங்கம், வெள்ளி விலையானது பல முறையானது புதிய உச்சங்களை எட்டியது. சொல்லப்போனால் சர்வதேச அளவில் மிக முக்கியமான முதலீடுகளாக ஜொலித்து வருகின்றன. தங்கத்தை காட்டிலும் வெள்ளி விலையானது நடப்பு ஆண்டில் 174% ஏற்றம் கண்டுள்ளது. இதே தங்கம் 73% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது. இதே எம்சிஎக்ஸ் வெள்ளியானது 165% ஏற்றமும், எம்சிஎக்ஸ் கோல்டானது 81% ஏற்றமும் கண்டுள்ளன. இந்த போக்கானது 2026ம் ஆண்டிலும் தொடருமா என எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள், தொடர்ந்து தங்கத்தை வாங்கலாமா, ஏற்கனவே வாங்கியிருப்பதை என்ன செய்யலாம் என்ற குழப்பத்திலும் இருந்து வருகின்றனர்.

பொதுவாக பார்த்தால் 2026ம் ஆண்டிலும் மேற்கண்ட இரு விலை உயர்ந்த உலோகங்களுமே ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் பல்வேறு முக்கிய காரணிகள் மத்தியில் தங்கம், வெள்ளி விலையானது ஏற்றம் கண்டது. குறிப்பாக பல்வேறு அரசியல் பிரச்சனைகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், நிச்சயமற்ற பொருளாதார சூழல், வர்த்தக பதற்றங்கள், மத்திய வங்கிகளின் வட்டி மாற்ற நடவடிக்கைகள் என பல காரணிகளும் தங்கம், வெள்ளி விலையில் பிரதிபலித்தன. மேலும் சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில், மத்திய வங்கிகள் பலவும் தங்கம் வாங்கி குவித்து வந்தன. வெள்ளியின் தேவையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. குறிப்பாக முதலீட்டு ரீதியாகவும், தொழில்துறை ரீதியாகவும் உச்சம் தொட்டது. இது தொடர்ந்து வரும் புதிய ஆண்டிலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் அவுட்லுக்!

எல்கேபி செக்யூரிட்டீஸ் தரகு நிறுவன அறிக்கையின் படி, தங்கம், வெள்ளியில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடியான ஏற்றமானது தற்காலிகமானது அல்ல. இது நீண்ட கால மாற்றத்தின் ஒரு தொடக்கமே, அடுத்த 12 – 18 மாதங்களில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 1,50,000 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 5,000 டாலர்கள் வரையில் எட்டலாம் என பல தரகு நிறுவனங்களும் கணித்துள்ளன. இது அதிகரித்து வரும் கடன் பிரச்சினைகள், போர் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் கொள்முதல், அமெரிக்க டாலருக்கு இணையான மற்ற நாணயங்களின் மதிப்பு சரிவு போன்றவை, தொடர்ந்து தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும். ஆக இடையில் ஏதேனும் விலை சரிவு இருந்தாலும் கூட, அதை குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெள்ளி அவுட்லுக்!

நடப்பு ஆண்டை போலவே 2026லும் வெள்ளி விலை தங்கத்தை விட உச்சம் தொடலாம். இது தொழில் துறையில் அதிகரித்து வரும் தேவை மத்தியில் இருக்கும். சர்வதேச சந்தையில் 75 – 80 டாலர்கள் வரையில் கூட செல்லலாம். இது இந்திய சந்தையில் கிலோவுக்கு 2,25,000 ரூபாய் முதல் 2,50,000 ரூபாய் வரை செல்லலாம். இருப்பினும் தொழில்துறையினர் வெள்ளிக்கு மாற்றையும் தேட வாய்ப்புள்ளது. ஆக இதையும் கவனத்தில் கொள்வது நல்லது. தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் விலையேற்றம் இருக்கும் என்றாலும், அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Will the bull run in gold and silver continue into 2026, or will prices stabilize?

Most market experts believe the gold, silver bull run will continue in 2026, through at a more measured pace compared to the record-breaking gains of 2025. Story first published: Wednesday, December 31, 2025, 11:47 [IST] Other articles published on Dec 31, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *