Breaking: 2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது?

befunky-collage11-1765810677

  பர்சனல் பைனான்ஸ்

2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது?

Personal Finance oi-Pugazharasi S By Published: Monday, December 15, 2025, 20:28 [IST] Share This Article

இன்றைய வேகமான உலகில், ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வது என்பது அவசியமான ஒன்று. ஆனால் மருத்துவ செலவுகள் என்றாலே பலருக்கும் ஒருவித தயக்கம் இருக்கிறது. குறிப்பாக பொருளாதாரத்தின் பின்தங்கிய ஏழைக் குடும்பங்கள், ஹெல்த் இன்சூரன்ஸ், விபத்துக் காப்பீடு போன்றவற்றை தேவையில்லாத செலவாக நினைக்கிறார்கள். பலரும் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருக்கும் நிலையில், விபத்து காப்பீடு எங்கே எடுப்பது என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

ஆனால் உண்மையில் நீங்கள் தினமும் அருந்தும் டீயை கட்டுப்படுத்தினாலே, உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கான மாபெரும் பாதுகாப்பை பெறலாம் என்று உங்களால் நம்ப முடிகிறதா? மாத மாதம் மிகக் குறைந்த பிரீமியத்தை செலுத்தி ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா, நிச்சயம் இது உண்மைதான். குறைந்த செலவில் முழு பாதுகாப்புடன் உங்கள் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய, அது என்ன திட்டம், அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் எளிய முறை ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது?

இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிப்பு!

பணவீக்கம் உயர்ந்து வரும் சூழலில், வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியம் உள்பட, பலவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. மக்கள் உணவு மற்றும் அன்றாட தேவைகளுக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் விபத்து காப்பீட்டின் கட்டணமும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் விபத்து காப்பீட்டை பெறுவது மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும் இந்த சிக்கலை சமாளிக்க இந்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா!

மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PM Suraksha Bima Yojana) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மிகக் குறைந்த பிரீமியத்தில் கணிசமான காப்பீட்டுத் தொகையை பெற முடியும். ஆண்டுக்கு வெறும் 20 ரூபாய் செலுத்தினால், 2 லட்சம் ரூபாய் வரையிலான விபத்துக் காப்பீட்டைப் பெறலாம். இந்த திட்டம் குறிப்பாக குறைவான வருமானம் கொண்ட அடித்தட்டு மக்களுக்கும், அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கலாம்.

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவால் என்ன பலன்?

அரசின் விபத்து காப்பீட்டுத் திட்டமான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில், காப்பீடு செய்யப்பட்ட ஒரு நபர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தரமாக ஊனமடைந்தாலோ அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இத்திட்டத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், ஆண்டு பிரீமியம் வெறும் 20 ரூபாய் மட்டுமே. இந்த தொகையானது நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படுகிறது.

யாரெல்லாம் பலன் அடையலாம்?

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட யார் வேண்டுமானாலும் இணையலாம். இதற்கு விண்ணப்பதாரர்கள் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்த காப்பீட்டுக் காலம் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஆகும். ஆக ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதிக்கு முன் பிரீமியத் தொகையை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் விருப்பப்பட்டால் தானாக பணம் கழிக்கப்படும் வசதியையும் செயல் படுத்திக் கொள்ளலாம். இதே வங்கியின் கூட்டாக கணக்கு வைத்திருப்பவர்கள், ஒவ்வொருவரும் 20 ரூபாய் பிரீமியம் செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம்.

இதுவே ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள், ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும். பல கணக்குகள் மூலம் ஒருவரே விண்ணப்பித்தால், அதன் மூலம் எந்த பலனையும் பெற முடியாது.

எதற்கு எவ்வளவு காப்பீடு?

அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் விபத்து ஏற்பட்டு இறப்பு அல்லது நிரந்தரமான ஊனம் ஏற்பட்டால், 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். விபத்தின் மூலம் பகுதி ஊனம் ஏற்பட்டால் 1 லட்சம் ரூபாய் காப்பீடாக வழங்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதான ஒன்று.

உங்கள் வங்கியின் வலைத்தளம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மூலமாக அல்லது PMSBY-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே நீங்கள் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போது நாமினி உட்பட அனைத்து விவரங்களையும் தெளிவாக நிரப்ப வேண்டும். இந்த காப்பீடானது சந்தாதாரருக்கு 70 வயது பூர்த்தியாகும் போது ரத்தாகலாம். மேலும் வங்கிக் கணக்கை மூடினால் அல்லது பிரீமியத்தைச் செலுத்த போதுமான இருப்பு வங்கிக் கணக்கில் இல்லாவிட்டால் ரத்தாகலாம். ஆக கவனமுடன் விண்ணப்பிப்பது நல்லது.

Share This Article English summary

Is it true that the Pradhan Mantri Suraksha Bima Yojana offers ₹2 lakh coverage for a premium of only Rs.20?

Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) is a low-cost personal accident insurance scheme launched by the Government of India Story first published: Monday, December 15, 2025, 20:28 [IST] Other articles published on Dec 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *