Breaking: வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணமா? கோடிக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி..!!

whatsapp5-1769496000

  செய்திகள்

வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணமா? கோடிக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி..!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, January 27, 2026, 12:12 [IST] Share This Article

உலகளவில் பல கோடி பேர் பயன்படுத்தக்கூடிய ஒரு தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp இருக்கிறது. தனிப்பட்ட முறையிலும் அலுவல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ஏராளமானவர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள்.

உலக அளவில் பெரும்பாலானவர்களின் நம்பிக்கை மிகுந்த ஒரு செயலியாக வாட்ஸ் அப் திகழ்ந்து வருகிறது. இதற்கு அதில் உள்ள என்கிரிப்டட் மெசேஜ் முறை முக்கிய காரணம். தொடக்கத்தில் மெசேஜ் அனுப்ப கூடிய ஒரு செயலியாக மட்டுமே இருந்த வாட்ஸ் அப். தற்போது புகைப்படங்கள் ,ஃபைல்கள், வீடியோ உள்ளிட்டவற்றை பகிரும் வசதி கொண்டிருக்கிறது. அலுவல் ரீதியான மீட்டிங்குகளை நடத்துவதற்கான வசதியும் வாட்ஸ்அப் செயலியில் வந்து விட்டது.

வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணமா? கோடிக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி..!!

வாட்ஸ் அப் சேனல், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என புதுப்புது வசதிகள் அப்டேட் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் வாட்ஸ் அப் நிறுவனம் விளம்பரங்களை டிஸ்ப்ளே செய்யும் வசதியை கொண்டு வந்தது. அதாவது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் நமக்கு தோன்றும். ஸ்டேட்டஸ்களுக்கு நடுவே இவ்வாறு விளம்பரம் தோன்றுவதை கடந்த டிசம்பர் மாதம் சோதனை முறையில் தொடங்கியது வாட்ஸ் அப்.

தற்போது அதை முழுமையாக பெரும்பாலான பயனர்களுக்கு கொண்டு வந்துவிட்டது. பயனர்கள் ஸ்டேட்டஸ் மூலம் விளம்பரங்கள் வருவது தங்களுக்கு இடையூறாக இருக்கிறது என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விளம்பரம் இல்லாத வாட்ஸ் அப் சேவையை பெற வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்வதற்கு வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Also ReadWork from Home ஊழியர்களுக்கு கட்டம் கட்டும் ஐடி நிறுவனங்கள்!! இன்போசிஸ் அனுப்பிய முக்கிய மெயில்!!Work from Home ஊழியர்களுக்கு கட்டம் கட்டும் ஐடி நிறுவனங்கள்!! இன்போசிஸ் அனுப்பிய முக்கிய மெயில்!!

இது தொடர்பான சோதனை பணிகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக மணி கண்ட்ரோல் செய்தி குறிப்பிடுகிறது. தற்போதைக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் முதல் கட்டமாக இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் இல்லாத சேவையை பெறுவதற்கு ad free subscription முறையை அறிமுகம் செய்தது. அதேபோல வாட்ஸ் அப்பிலும் ad free subscription முறையை முதல் கட்டமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

Recommended For Youஇந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெளிச்சத்துக்கு வந்தது டிரம்பின் இரட்டை வேடம்!!இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெளிச்சத்துக்கு வந்தது டிரம்பின் இரட்டை வேடம்!!

இதற்கு கட்டணமாக சுமார் 430 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் எந்த ஒரு இடையூறும் இல்லை எளிமையாக மெசேஜ் அனுப்ப முடியும் என்பதற்காக தான் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் தற்போது அதில் விளம்பரம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், விளம்பரம் இல்லாமல் பயன்படுத்துவதற்கு சப்ஸ்கிரைப் எனப்படும் சந்தா செலுத்த வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வந்தால் பயனர்கள் மத்தியில் எதிர்ப்பை சந்திக்கும் என சொல்லப்படுகிறது.

Share This Article English summary

WhatsApp Explores Paid Ad-Free Subscription for Status and Channels

Meta is testing a subscription option in WhatsApp version 2.26.3.9 that lets users pay to remove ads from Status and Channels sections, following backlash against recent ad tests. Story first published: Tuesday, January 27, 2026, 12:12 [IST] Other articles published on Jan 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *