வருஷமே இப்போ தான் தொடங்கி இருக்கு!! அதுக்குள்ளவா? டெக் நிறுவனங்களின் அட்டூழியம்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 13, 2026, 15:56 [IST] Share This Article
2025 ஆம் ஆண்டில் கூகுள், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. 2025 ஆம் ஆண்டு டெக் நிறுவன ஊழியர்களுக்கு மோசமான ஆண்டு எனக் கூறலாம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் வரை பணியிழந்தார்கள். இது அதிகாரப்பூர்வமாக வெளியான எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய பணியை இழந்தார்கள்.
2026 ஆம் ஆண்டு தொடங்கி 13 நாட்கள் தான் ஆகியிருக்கிறது ஆனால் அதற்குள்ளாக மூன்று பெரிய நிறுவனங்கள் ஊழியர்கள் நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தங்களுடைய ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

தங்களுடைய நிறுவனத்தில் ரியாலிட்டி லேப் செக்டர் பிரிவில் வேலை செய்து வரும் 10 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் அதற்கு மாறாக அந்த பணத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய இருப்பதாகவும் மெட்டா நிறுவனம் அறிவித்திருப்பதாக ப்ளூம்பெர்க் செய்தி குறிப்பிடுகிறது. மெடா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்திலும் ஏஐ இணைக்கப்பட்ட அணியக்கூடிய உபகரணங்களிலும் அதிக கவனம் செலுத்துவதால் மற்ற துறைகளில் ஆட்களை குறைத்து விட்டு அந்த பட்ஜெட்டை இதற்காக ஒதுக்கீடு செய்து வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய வங்கி நிறுவனமான சிட்டி குரூப் தங்களுடைய ஊழியர்களில் ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது. சிட்டி குரூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜேன் பிரேசர் நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் நோக்கில் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Also Read
6 மாதங்களில் 30,000 ஊழியர்களை காலி செய்த TCS..!! காலாண்டு நிதி முடிவுகளில் வெளிவந்த உண்மை!!
2026 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வோம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நிறுவனம் அறிவித்திருந்தது . அதனை இந்த ஆண்டு தொடர போவதாக தெரிவித்து இருக்கிறது.அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய முதலீடு நிறுவனமான ப்ளாக் ராக் தங்கள் ஊழியர்களில் நூற்றுக்கணக்கானவர்களை பணியில் இருந்து நீக்குவதாக தெரிவித்து இருக்கிறது. ஊழியர்களில் ஒரு சதவீதம் பேர் இந்த முறை பணிநீக்கம் செய்யப்பட இருக்கின்றனர். முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 22,000 பேரை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இது போலியான தகவல் என மைக்ரோசாப்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Recommended For You
திடீர்னு Layoff பண்ணிட்டாங்களா? கடன் கழுத்தை நெறிக்குதா?- இத ஃபாலோ பண்ணீங்கனா டென்ஷனே வேண்டாம்!!
ஏஐ தொழில்நுட்பம் எனும் கத்தி தொடர்ந்து ஐடி ஊழியர்களின் தலையில் தான் தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் டெக் வேலைகளே பாதுகாப்பற்றவையாக மாறி வருகின்றன. ஊழியர்கள் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறன்களை வளர்த்து கொள்வது கட்டாயமாகியுள்ளது. அது தவிர ஏஐ தொழில்நுட்பங்களை சக ஊழியராக பாவிக்க வேண்டிய சூழலும் உண்டாகி இருக்கிறது.
Share This Article English summary
Meta, BlackRock, Citigroup Kick Off 2026 with Mass Layoffs Amid Restructuring Wave
Major firms like Meta, Citigroup, and BlackRock are slashing hundreds of jobs in the first weeks of 2026 to streamline operations and fund priorities such as AI. Story first published: Tuesday, January 13, 2026, 15:56 [IST] Other articles published on Jan 13, 2026
