Breaking: ரெக்கார்ட் பிரேக்! சரித்திரம் படைத்த எஸ்பிஐ:மிரண்டு போன முதலீட்டாளர்கள் – இன்று வாங்கலாமா?

befunky-collage-2026-02-09t095304-134-1770611019

  Market update

ரெக்கார்ட் பிரேக்! சரித்திரம் படைத்த எஸ்பிஐ:மிரண்டு போன முதலீட்டாளர்கள் – இன்று வாங்கலாமா?

Market Update oi-Pugazharasi S By Published: Monday, February 9, 2026, 9:53 [IST] Share This Article

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), இன்று ஒரு புதிய சரித்திரத்தை படைத்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், இதுவரை இல்லாத அளவாக 21,028 கோடி லாபத்தை ஈட்டி, ஒட்டுமொத்த பங்குச் சந்தையையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 25% லாபம் அதிகரித்திருப்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அந்த வங்கியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. வட்டி வருமானம் உயர்வு, வாராக்கடன் குறைவு என அனைத்து பிரிவுகளிலும் சிக்ஸர் அடித்துள்ள எஸ்பிஐ, தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்டை வழங்குமா என்பது தான் தற்போதைய கேள்வி.

பங்குச் சந்தை நிபுணர்கள் தொடர்ந்து வாங்கலாம் என ரேட்டிங் கொடுத்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் எஸ்பிஐ பங்கு விலை எவ்வளவு வரை உயரும்? முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? விரிவான அலசல் இதோ..

ரெக்கார்ட் பிரேக்! சரித்திரம் படைத்த எஸ்பிஐ:மிரண்டு போன முதலீட்டாளர்கள் - இன்று வாங்கலாமா?

இமாலய சாதனை!

இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்கானது எஸ்பிஐ, இதுவரை இல்லாத அளவில் ஒரு சரித்திரம் படைத்துள்ளது. அதாவது டிசம்பர் காலாண்டில் இதுவரை இல்லாத அளவாக 21,028 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பங்கு சந்தை முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த லாப வளர்ச்சியானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 24.5% அதிகமாகும். தொடர்ந்து வலுவான வங்கியின் செயல்பாடுகள் இது முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வங்கியின் வாராக்கடன் குறைந்து, லாபம் எகிறியுள்ளது மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் எஸ்பிஐ வங்கியின் லாபம் இந்த அளவு உயர அதன் துணை நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் முக்கிய பங்கு வகித்துள்ளது. விரைவில் ஐபிஓ வெளியிடவுள்ள இந்த நிறுவனம், 2,200 கோடி ரூபாய் சிறப்பு டிவிடெண்டை எஸ்பிஐ வங்கிக்கு வழங்கியுள்ளது. இது வங்கியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் பங்குச் சந்தையிலும் ஒரு புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்!

டிசம்பர் காலாண்டில் வங்கியின் செயல்பாடுகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாக கூறும் வங்கி அறிக்கை, அதன் மொத்த வருமானம் 1,28,467.39 கோடி ரூபாயில் இருந்து, 1,40,914.65 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே நிகர வட்டி வருமானம் கடந்த ஆண்டை காட்டிலும் 9% அதிகரித்து, 45,190 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதே செயல்பாட்டு லாபமானது சிறந்த மேலாண்மை காரணமாக 39.54% அளவுக்கு அதிகரித்து, 32,862 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும் வங்கியின் ஒட்டுமொத்த நிகர வட்டி மார்ஜின் ஆனது 2.99% ஆகவும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து வாராக்கடன் குறைந்து வருவது, வங்கியின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் மத்திய பட்ஜெட்டின் உத்வேகம் காரணமாக, வங்கி தனது கடன் வளர்ச்சி இலக்கை 13-15% ஆக உயர்த்தியுள்ளதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. இதனிடையே இவ்வங்கி பங்கானது 5.66% அதிகரித்து, 1,127 ரூபாயாக காணப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Why did SBI stocks recommended buy today following its historic Q3 2026 results?

SBI reported a record Rs. 21,028 crore profit with 20-year best asset quality, making it a top watch for investors today. Story first published: Monday, February 9, 2026, 9:53 [IST] See More On: sbi, எஸ்பிஐ Other articles published on Feb 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *