Breaking: ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: யாரிடம் அதிக சொத்து உள்ளது..?

rash-1771819011

  செய்திகள்

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: யாரிடம் அதிக சொத்து உள்ளது..?

News oi-Devika Manivannan By Updated: Monday, February 23, 2026, 9:50 [IST] Share This Article

நேஷ்னல் கிரஸ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் 26 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தை தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி என்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.

நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டின் முக்கியமான ஒரு செலிபிரிட்டி திருமணமாக இந்த ஜோடியின் திருமணம் என்பது அமைகிறது. ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் இணைந்து நடித்தவர்கள். நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியான நிலையில், பின்னர் இருவருமே தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: யாரிடம் அதிக சொத்து உள்ளது..?

அண்மையில் தான் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. ராஷ்மிகா தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் பாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து நாடு முழுவதுமே ரசிகர்களை கொண்டிருப்பவர். கன்னட திரையுலகில் க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தை சேர்ந்த ராஷ்மிகா, கன்னட திரையுலகில் இருந்து தெலுங்கு பின்னர் தமிழ் பின்னர் பாலிவுட் என படிப்படியாக பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றி பெற்றிருக்கிறார். விஜய் தேவரகொண்டா தன்னுடைய அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். இதனை அடுத்து அவர் நடித்த பல்வேறு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: யாரிடம் அதிக சொத்து உள்ளது..?

தற்போது விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்ய இருக்கின்றனர். இவர்களில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர் என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம். விஜய் தேவர கொண்டா தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குகிறார். இவர் நடித்த பல்வேறு படங்களும் தெலுங்கு திரை உலகில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருக்கின்றன. இவரை பொறுத்தவரை ஹைதராபாத்தில் பிலிம் நகரில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆடம்பர பங்களாவுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

Also Readரயில் டிக்கெட்டுகள் : மார்ச் 1 முதல் வரப்போகும் மேஜர் மாற்றம்!! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!ரயில் டிக்கெட்டுகள் : மார்ச் 1 முதல் வரப்போகும் மேஜர் மாற்றம்!! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

ஆடம்பர கார்கள் வாங்குவதில் விருப்பம் கொண்டவர். இவருக்கு சொந்தமாக BMW 5 Series, Ford Mustang, Volvo XC90 , Range Rover கார்கள் இருக்கின்றன. இவர் ஒரு படத்திற்கு 12 லிருந்து 15 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். இது தவிர ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் இவர் வைத்திருக்கிறார். சுமார் 60 கோடி முதல் 70 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு கொண்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For Youதங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ?தங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ?

ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் தற்போது பிஸியாக இருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பது , விளம்பரங்களில் தோன்றுவது உள்ளிட்ட வழிகளில் இவருக்கு வருமானம் கிடைக்கிறது. ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இவர் 66 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவர் என ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது. பெங்களூருவில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இது தவிர மும்பை, கோவா,கூர்க், ஹைதராபாத் நகரங்களிலும் சொந்தமாக சொத்துக்களை வாங்கி வைத்திருக்கிறார்.இவர் Audi Q3, Range Rover Sport, Toyota Innova, Hyundai Creta Mercedes-Benz C-Class கார்களை வைத்திருக்கிறார்.

Share This Article English summary

Vijay Deverakonda & Rashmika Mandanna: Rs 120 Crore combined Empire and Lavish Lives amid Wedding

As Vijay Deverakonda and Rashmika Mandanna ties knot on feburary 26, here are the estimated net worths fueled by films and endorsements. Story first published: Monday, February 23, 2026, 9:28 [IST] See More On: wedding, net worth, celebrities, திருமணம், சொத்து மதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *