யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி: சென்னையில் இன்று ஒரு கிராம் விலை என்ன?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 10:13 [IST] Share This Article
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்தது. இனி தங்கம் விலை இறங்குமுகம் தான் மகிழ்ச்சி அடைவதற்கு 2ஆம் தேதி முதல் உயர தொடங்கியது.
அதனை தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக உயர்விலேயே இருந்த தங்கம் விலை பின்னர் இரண்டு நாட்கள் குறைந்தது. ஆனால் இன்றைய தினம் மீண்டும் யூடர்ன் போட்டு தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் நேற்று 12,750 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 50 ரூபாய் விலை உயர்ந்த 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை அன்று விற்பனை செய்யப்பட்ட விலைக்கு மீண்டும் திரும்ப வந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து 1,02,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேர்ட் தங்கம் கிராம் 55 ரூபாய் விலை உயர்ந்து 13,964 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 440 ரூபாய் விலை உயர்ந்து 1,11,712 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Also Read
2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!
சென்னையில் 18 கேரட் தங்கமும் விலை உயர்வு கண்டுள்ளது. சென்னையில் 18 கேரட் தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்த 10,680 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,440 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது. தற்போது நிலைமை சற்றே அமைதியாகி இருப்பதால் தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் இருக்கிறது.
Recommended For You
பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?
வெள்ளியின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்திருக்கிறது. சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளி 256 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து தொடர்ந்து உயர்ந்து வந்த வெள்ளி ஜனவரி 7ஆம் தேதி அன்று 277 ரூபாய் என உச்சம் தொட்டது. இந்த நிலையில் நேற்று இன்று என இரண்டு நாட்களில் மொத்தமாக 9 ரூபாய் வரை கிராமுக்கு விலை குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் வெள்ளி 268 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது , ஒரு கிலோ வெள்ளி 2,68,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் 4,463 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 76.6 டாலருக்கு விற்பனையாகிறது. இது நேற்றை விட விலை குறைவாகும்.
Share This Article English summary
Gold Rate in Chennai increased today and silver rate sees decline
Gold Rate in Chennai increased today and silver rate sees decline. Major global factors behind this gold and silver rate fluctuations. Story first published: Friday, January 9, 2026, 10:13 [IST] Other articles published on Jan 9, 2026
