Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

  செய்திகள்

ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்தது.. லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

News oi-Devika Manivannan By Updated: Tuesday, November 18, 2025, 11:06 [IST] Share This Article

மும்பையிக் சிஎன்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிஎன்ஜி மூலம் இயங்கக்கூடிய பேருந்துகள், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சேவை நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக இருக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2002ஆம் ஆண்டு முதல் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து ,ஆட்டோ, டாக்ஸி என 12 .30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிஎன்ஜி மூலம் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மகாநகர் கேஸ் என்ற நிறுவனம் மும்பை, நவி மும்பை ,தானே உள்ளிட்ட நகரங்களில் குழாய்கள் மூலம் சிஎன்ஜியை விநியோகம் செய்து வருகிறது . ஏராளமான குடியிருப்புகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு வீடுகளுக்கு தேவையான எரிவாயுவும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்தது.. லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

இந்நிலையில் இயற்கை எரிவாய் விநியோகம் செய்யக்கூடிய பிரதான குழாயில் சேதம் ஏற்பட்டிருக்கிறது இதனால் சிஎன்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான குழாய் சேதமடைந்ததால் சிஎன்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என மகாநகர் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக மும்பை ,தானே மற்றும் நவி மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள சிஎன்ஜி நிலையங்கள் , பொது போக்குவரத்துக்கான பிரத்தியேக சிஎன்ஜி நிலையங்கள் ஆகியவற்றுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எரிவாயு கிடைக்காததால் அதன் மூலம் இயங்கி வந்த ஆட்டோக்கள், டேக்ஸிகள் மற்றும் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சிஎன்ஜி விற்பனை நிலையங்களில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வாகன ஓட்டிகள் மட்டுமல்ல சாமானிய மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Readதங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!

சில இடங்களில் விற்பனை நிலையங்களே தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. திடீரென சிஎன்ஜி பேருந்து ,ஆட்டோ மற்றும் கார்கள் இயங்காததால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை முழுவதுமே தற்போது இந்த சிஎன்ஜி தட்டுப்பாடு என்பது ஏற்பட்டிருக்கிறது . கிட்டதட்ட 44% சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படவில்லை. 5 லட்சம் தனியார் வாகனங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

வீடுகளுக்கு சிஎன்ஜி விநியோகம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக மகாநகர் கேஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது . செவ்வாய்க்கிழமை இரவுக்குள் நிலைமையை சீர் செய்யப்பட்டு விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான சிஎன்ஜி வாகனங்கள் இயங்காததால் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகமாகி இருக்கிறது.

Recommended For Youமோமோ விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வருமானமா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..!!மோமோ விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வருமானமா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..!!

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவு கட்டணம் வசூல் செய்கின்றனர் என மும்பை நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஓலா மற்றும் ஊபர் ஆகிய செயலிகளில் டிமாண்ட் அதிகமாகி பல மடங்கு கட்டணம் உயர்ந்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர். விமான நிலையங்கள், பேருந்துநிலையங்களில் வாகனங்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். இதன் காரணமாக மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Share This Article English summary

Mumbai CNG Disruption: lakhs of autos, taxis, and school buses off the roads

A gas line damage in Chembur has crippled Mumbai’s transportation, with CNG stations shut and many autos, taxis, and school buses off the roads. Story first published: Tuesday, November 18, 2025, 10:59 [IST]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *