Breaking: மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!!

trump38-1771997949

  செய்திகள்

மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, February 25, 2026, 11:10 [IST] Share This Article

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரி தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடன் டிரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு போட்டி வரி விதிப்பதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி என அதிரடி காட்டினார். இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி தொழில் சார்ந்து இயங்கக் கூடியவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது. தமிழ்நாட்டில் ஈரோடு ,கரூர் ,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தோல்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளுக்கும் அபாயமும் ஏற்பட்டது.

மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!!

இந்த சூழலில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்திய பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டார் டிரம்ப். ஆனால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் விதித்த போட்டி வரி செல்லாது எனக்கூறி அனைத்தையும் ரத்து செய்தது. இதனை அடுத்து டிரம்ப் புதிய வரி விதிப்புகளை அறிவித்த வண்ணம் இருக்கிறார். தற்போது இந்திய பொருட்களுக்கு 10 சதவீத வரி நடைமுறையில் இருக்கும் என அவர் அறிவித்தார்.

Also Readநினைத்ததை சாதித்த டிரம்ப்!! ரஷ்யாவுக்கு குட்பை சொல்லி வெனிசுலாவுக்கு வணக்கம் வைத்த இந்தியா!!நினைத்ததை சாதித்த டிரம்ப்!! ரஷ்யாவுக்கு குட்பை சொல்லி வெனிசுலாவுக்கு வணக்கம் வைத்த இந்தியா!!

இந்நிலையில் இந்திய பொருளுக்கு புதிதாக ஒரு வரியை அறிமுகம் செய்திருக்கிறார். இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படக்கூடிய சூரிய ஒளி மின் உற்பத்திக்கான உபகரணங்களுக்கு 126 சதவீத வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்கா வர்த்தகத் துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது.

மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!!

அமெரிக்காவுக்கு தேவையான சோலார் பேனல்களில் 50% இந்தியா, இந்தோனேஷியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த நாடுகளில் அதிக மானியம் பெற்று சோலார் பேனல்களை உற்பத்தி செய்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்கிறார்கள் இது நியாயமற்ற வர்த்தகம் என அமெரிக்க உற்பத்தியாளர்கள் புகார் கூறினர்.

இதனை அடுத்து தான் டிரம்ப் அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு 126 சதவீத வரியும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி பொருட்களுக்கு 143 சதவீத வரியும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Recommended For Youதங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த இறக்குமதி வரியை உயர்த்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. 2025ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 792.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள சோலார் பேனல்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது ஒன்பது மடங்கு அதிகம்.

தற்போது இந்தியாவில் இருந்து சோலார் பேனல் இறக்குமதிக்கான வரியை உயர்த்தி இருப்பதால் இந்திய சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களை இழக்க நேரிடலாம். அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டிலேயே சோலார் பேனல்களை உற்பத்தி செய்ய முன் வரும் இல்லை என்றால் குறைந்த வரி கொண்ட நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யும், இதனால் இந்திய சோலார் உற்பத்தியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share This Article English summary

US Imposes 126% Preliminary Tariffs on Indian Solar Panels Over Subsidies

The Trump administration has announced initial countervailing duties of 126% on solar imports from India, citing unfair government subsidies that undercut US manufacturers. Story first published: Wednesday, February 25, 2026, 11:10 [IST] See More On: டிரம்ப், வரி, solar, trump, tariff Other articles published on Feb 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *