மாசம் ரூ.9000 வட்டி வருமானம் வேணுமா? போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்துல இப்படி முதலீடு செஞ்சா போதும்..!
Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, February 10, 2026, 16:14 [IST] Share This Article
உங்களுடைய பணத்தை ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், அந்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மாதம்தோறும் உங்களுக்கு வருமானத்தை ஈட்டி தர வேண்டுமா? நம்முடைய தபால் நிலையத்திலேயே இதற்கான ஒரு சூப்பர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முதலீடு திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்துவிட்டால் போதும் ஒரு கணிசமான தொகை உங்களுடைய அக்கவுண்டில் வந்து கிரெடிட் ஆகி கொண்டு இருக்கும். இது மத்திய அரசு திட்டம் என்பதால் உங்களுடைய அசல் தொகையும் பாதுகாப்பாக இருக்கும், மாதம் தோறும் உங்களுக்கு வருமானம் வருவதும் கேரண்டி.

இந்தியாவில் தபால் நிலையங்கள் வாயிலாக பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான மற்றும் பிரபலமான ஒரு திட்டம்தான் மாதாந்திர வருமானம் தரக்கூடிய post office monthly income scheme எனப்படும் சேமிப்பு திட்டம். இதில் நாம் பணத்தை முதலீடு செய்துவிட்டால் போதும். நம்முடைய அசல் தொகை பாதுகாப்பாக இருக்கும், அதற்கான வட்டி தொகையை மாதந்தோறும் நமக்கு ஒரு வருமானமாக வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.
இந்தியாவை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு குடிமகனும் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய தபால் நிலையத்திற்கு சென்று இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிங்கள் அக்கவுண்ட் ஆகவும் முதலீடு செய்யலாம் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையிலும் முதலீடு செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையில் மூன்று பேர் வரை சேர்ந்து ஒரே கணக்கில் பணத்தை போட முடியும்.
Also Read
இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்?
தற்போது போஸ்ட் ஆபீஸின் மாதாந்திர வருமான முதலீட்டு திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி என்பது வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்யக்கூடிய பணத்திற்கு ஓராண்டுக்கு 7.4% என்ற அளவில் வட்டியை கணக்கீடு செய்து அதனை 12 மாதங்களுக்கும் பிரித்து உங்களுடைய கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். ஐந்தாண்டு காலம் இதற்கான முதிர்வு காலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கணக்கு தொடங்கிய அடுத்த மாதத்தில் இருந்து வட்டி வருமானம் உங்களுக்கு வரவு வைக்கப்படும்.
சிங்கிள் அக்கவுண்ட் என்றால் அதிகபட்சமாக ஒரு நபர் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும்போது உங்களுக்கு மாதம் தோறும் 5500 ரூபாய் வட்டி வருமானமாக கிடைக்கும். அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு இந்த பணம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
Recommended For You
வட்டி வருமானமே ரூ.2 லட்சம்!! போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பத்தி தெரிஞ்சா வேற எங்கயும் போக மாட்டீங்க!!
இதுவே ஜாயிண்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு கணக்கு முறையில் நீங்கள் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில் உங்களுக்கு மாதந்தோறும் 9250 ரூபாய் வருமானமாக வந்து கொண்டிருக்கும். ஓய்வு பெற்றவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு சேமிப்பு திட்டம் இது. தங்களுடைய ஓய்வூதிய தொகையை இதில் முதலீடு செய்துவிட்டு மாதம் தோறும் வரக்கூடிய வருமானத்தை எடுத்து செலவுகளை பார்த்துக் கொள்ளலாம். நம்முடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும் அது சம்பாதித்து நமக்கு வட்டி வருமானமும் கொடுக்கும்.
Share This Article English summary
Invest in the Post office scheme once and earn a Fixed Monthly Income
Post Office Monthly Income Schemes (POMIS), offer predictable returns with low to moderate risk, it is suitable for pensioners and low risk takers. Story first published: Tuesday, February 10, 2026, 16:14 [IST] See More On: investments, post offices, interest rates, வட்டி, சேமிப்பு Other articles published on Feb 10, 2026
