மகளிர் உரிமைத் தொகை: இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு..! இத விட்டா சான்ஸ் கிடைக்காது..!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 14:41 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிதாக மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதியிலிருந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்ங்கள் நடைபெற்ற வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பொறுத்தவரை , அரசின் சேவைகள் மக்களை தேடி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடங்கப்பட்டது.

வழக்கமாக ஒரு அரசு வேலையை முடிக்க நாம் பல நாட்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டும். ஆனால் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் இருப்பார்கள் என்பதால் மக்களின் தங்களின் பெரும்பாலான வேலைகளை ஒரே இடத்தில் ஒரே நாளில் முடித்து கொண்டார்கள்.
Also Read
45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?
ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடந்து முடிந்து விட்டன குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வரும் 14ம் தேதி வரை முகாம் நடைபெற இருக்கிறது. எனவே பின்வரும் மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் நான்கு நாட்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர் ,திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர் ,மதுரை ,சேலம் ,திருச்சி ,திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர் , திருவாரூர் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் வரும் 14ஆம் தேதி வரை அதாவது வரும் வெள்ளிக்கிழமை வரை மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள் .

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலான பல்வேறு அரசு சேவைகளையும் பெற முடியும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை , சுய தொழில் கடன் உதவி போன்றவற்றுக்கும் இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கும் இந்த முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
தங்கம் விலை மேலும் குறையுமா? – என்ன நடந்தால் விலை குறையும்?
வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓபிசி சான்றிதழ், கைம்பெண் சான்றிதழ், பட்டாவில் பெயர் மாற்றம், ஆதார் கார்டில் திருத்தம் போன்றவற்றுக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியும். முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு உதவி தொகை திட்டங்களை பெறுவதற்கும் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்துகின்றனர்.
எனவே உங்களுக்கு இந்த சேவைகள் தேவைப்படுகின்றன, குறிப்பாக மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பவர்கள் இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
Share This Article English summary
Ungaludan Stalin camps that brought govt services at doorstep to conclude this Friday
Ungaludan Stalin camps are nearing end as the 4 month long camps will be completed by this Friday. Those wants to apply for Magalir Urimai thokai can use this last chance. Story first published: Monday, November 10, 2025, 14:41 [IST] Other articles published on Nov 10, 2025