Breaking: மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஸ்கூட்டி வாங்க மானியம், ஆண்களுக்கும் இலவச பேருந்து – அதிமுக வாக்குறுதி!!

epsf-1768638189

  செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஸ்கூட்டி வாங்க மானியம், ஆண்களுக்கும் இலவச பேருந்து – அதிமுக வாக்குறுதி!!

News oi-Devika Manivannan By Published: Saturday, January 17, 2026, 13:54 [IST] Share This Article

இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான முன் தயாரிப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த முறை தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஒருபுறம் திமுக கூட்டணி, மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி, மற்றொருபுறம் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் என போட்டி அதிகரித்து இருக்கிறது. திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இந்த போட்டிக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கப் போகின்றன என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது.

மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஸ்கூட்டி வாங்க மானியம், ஆண்களுக்கும் இலவச பேருந்து - அதிமுக வாக்குறுதி!!

தேர்தல் வாக்குறுதிகள் தான் மக்களை எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி தயாரிப்பில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு மகளிர் உரிமை தொகை திட்டம் முக்கிய காரணமாக இருந்தது.

இந்த முறையும் பெண்களின் வாக்குகளை கைப்பற்ற பல்வேறு வாக்குறுதிகளை கட்சிகள் வெளியிடும். குறிப்பாக பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த முறையும் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கிறார்.

Also Readதங்கம் விலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா? கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்பு!!தங்கம் விலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா? கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்பு!!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டு இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதன்படி தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை போலவே குலவிளக்கு என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். குலவிளக்கு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த 2000 ரூபாய் பணம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும், இது நேரடியாக குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும் என கூறியுள்ளார். அடுத்ததாக தமிழ்நாட்டில் தற்போது மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படுகிறது. அதாவது உள்ளூர் பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பெண்கள் பயணம் செய்கின்றனர்.

Recommended For Youடிரம்பின் 50% வரியை தவிடுபொடியாக்கிய இந்தியா!! திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு குட்நியூஸ்!!டிரம்பின் 50% வரியை தவிடுபொடியாக்கிய இந்தியா!! திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு குட்நியூஸ்!!

கட்டணமில்லா பேருந்து சேவை ஆண்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எனவே அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களும் கட்டணமில்லாமல் உள்ளூர் பேருந்துகளில் பயணிக்க முடியும். தற்போது உள்ள 125 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகளை கட்டி கொடுக்கும் என கூறியிருக்கிறார். நகரங்களில் வீடு இல்லாதவர்களுக்கு அரசே அடுக்குமாடி வீடு வழங்கும் என்று அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். 5 லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

Share This Article English summary

ADMK election promise: Rs.2000 direct cash for women & free bus service for Men

ADMK general secretary Edapadi Palanisamy releases manifesto promising 2000 direct cash for women and free bus service for Men too. Story first published: Saturday, January 17, 2026, 13:54 [IST] Other articles published on Jan 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *