பொங்கல் பரிசு: கை விரல் ரேகை பதிவாகாத முதியவர்களுக்கு பணம் வழங்குவது எப்படி? அரசு முக்கிய உத்தரவு
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 13, 2026, 8:23 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு ரொக்கத்தை வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் மகிழ்ச்சியோடு இந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பையும் உற்சாகத்தோடு வாங்கிச் சென்று வருகின்றனர்.
ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவு செய்த பின்னர் தான் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுகிறது. எனவே ரேஷன் அட்டையில் இடம்பெறாத ஒரு நபரால் இந்த பொங்கல் பரிசு தொகையையும் பொங்கல் பரிசு தொகுப்பையும் வாங்கவே முடியாது. இந்த நிலையில் தான் சில ரேஷன் கடைகளில் இதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது வயதானவர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. ரேஷன் கார்டுதாரர்களின் விரல் ரேகையை கடைகளில் உள்ள பிஓஎஸ் எனப்படும் விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து ஆதார் சரிபார்ப்பு வாயிலாக தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் முதியவர்களின் விரல் ரேகை பதிவு செய்யும்போது இந்த விரல் ரேகை சரியாக பதியாமல் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழல் உண்டாகியுள்ளது என ரேஷன் கடை ஊழியர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.
Also Read
பொங்கல் பரிசுத்தொகை பெற கடைசி தேதி எது? தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரரின் விரல் ரேகை சரிபார்ப்பு தாமதம் ஏற்படுகிறது என்றால்அதற்கு மாற்றாக கண் கருவிழி பதிவை கருவியை பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குமாறு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனவே உங்களுக்கு கைவிரல் ரேகை சரி பார்ப்பு தாமதமாகிறது அல்லது கைவிரல் ரேகை பதியவில்லை எனும்போது இனி உங்களுடைய கண் கருவிழியை பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவார்கள்.
Recommended For You
பொங்கலில் பெண்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் ஐ பெரியசாமி!!
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.2 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையும், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை , கரும்பு மற்றும் வேட்டி சேலை அடங்கிய பரிசு தொகுப்பும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. கடந்த 8ஆம் தேதி முதல் தற்போது வரை கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் அட்டைதாரர்கள் இந்த பரிசினை வாங்கி இருக்கிறார்கள்.
பொங்கல் பரிசு தொகையை கவர்களில் போட்டு தரக்கூடாது பயனாளிகள் முன்னிலையில் எண்ணி கையில் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Share This Article English summary
Pongal gift distribution: Instead of fingerprints, iris verification can be used
Tamilnadu government has made an important announcement that, if fingerprints are not working for verification, they can go for iris verification to distribute Pongal prize gift. Story first published: Tuesday, January 13, 2026, 8:23 [IST] Other articles published on Jan 13, 2026
