Breaking: பொங்கல் தினத்தில் தங்கம், வெள்ளி வாங்க போறீங்களா..? சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..?

gold15-1768458127

  செய்திகள்

பொங்கல் தினத்தில் தங்கம், வெள்ளி வாங்க போறீங்களா..? சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..?

News oi-Prasanna Venkatesh By Published: Thursday, January 15, 2026, 11:53 [IST] Share This Article

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. புதுப்பானை பொங்கலிட்டு சர்க்கரை பொங்கல், வெல்லம் பொங்கல் தயாரித்து சூரியனை வணங்கி மக்கள் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். அறுவடை முடிந்த விவசாயிகள் விற்ற விளைபொருட்களின் பணத்தை தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது வழக்கமாக இருக்கும் வேளையில் இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை தாண்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் இதன் விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை சற்று தடுமாற்றத்துடன் வர்த்தகமாகி வந்தாலும் இந்தியாவில் நிலையாக உயர்ந்து வருகிறது. ஆசிய சந்தையில் தொடக்கத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், நேற்று அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 4615 என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் இன்று ஸ்பாட் சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பொங்கல் தினத்தில் தங்கம், வெள்ளி வாங்க போறீங்களா..? சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..?

ஆனால் ஸ்பாட் சந்தையில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,632.50 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டு 4,581.20 டாலர் வரையில் குறைந்துள்ளது. தற்போது 27 டாலர் சரிந்து 4599 டாலருக்கு வர்த்தகமாகிறது.

இதேபோல் வெள்ளி விலை கடந்த 24 மணிநேரத்தில் ஒரு டிராய் அவுன்ஸ் வெள்ளி விலை 93.70 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டு 86.29 டாலர் வரையில் குறைந்துள்ளது. தற்போது 4.7 டாலர் சரிந்து 88.45 டாலருக்கு வர்த்தகமாகிறது.

இந்திய MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் 0.67 சதவீதம் உயர்ந்து ரூ.1,43,201-ஆக உள்ளது. வெள்ளி 1 கிலோ 0.34 சதவீதம் உயர்ந்து ரூ.2,89,000-ஆக வர்த்தகமாகிறது. இந்த உயர்வு பொங்கல் தினத்தில் தங்கம் வாங்கும் மக்களுக்கு கவனத்தை ஈர்க்கிறது.

சென்னை ரீடைல் சந்தையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.13,290-ஆக உள்ளது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) ரூ.80 உயர்ந்து ரூ.1,06,320-ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.310-ஆகவும், ஒரு கிலோ ரூ.3,10,000-ஆகவும் உள்ளது. மற்ற நகரங்களில் தங்கம் விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 106320 ரூபாய், மும்பை – 105000 ரூபாய், டெல்லி – 105120 ரூபாய், கொல்கத்தா – 105000 ரூபாய், பெங்களூர் – 105000 ரூபாய், ஹைதராபாத் – 105000 ரூபாய், கேரளா – 105000 ரூபாய், புனே – 105000 ரூபாய், பரோடா – 105040 ரூபாய், அகமதாபாத் – 105040 ரூபாய், ஜெய்ப்பூர் – 105120 ரூபாய், லக்னோ – 105120 ரூபாய், கோயம்புத்தூர் – 106320 ரூபாய், மதுரை – 106320 ரூபாய் .

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 13,290 ரூபாய், மும்பை – 13,125 ரூபாய், டெல்லி – 13,140 ரூபாய், கொல்கத்தா – 13,125 ரூபாய், பெங்களூர் – 13,125 ரூபாய், ஹைதராபாத் – 13,125 ரூபாய், கேரளா – 13,125 ரூபாய், புனே – 13,125 ரூபாய், பரோடா – 13,130 ரூபாய், அகமதாபாத் – 13,130 ரூபாய், ஜெய்ப்பூர் – 13,140 ரூபாய், லக்னோ – 13,140 ரூபாய், கோயம்புத்தூர் – 13,290 ரூபாய், மதுரை – 13,290 ரூபாய் .

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 14,498 ரூபாய், மும்பை – 14,318 ரூபாய், டெல்லி – 14,333 ரூபாய், கொல்கத்தா – 14,318 ரூபாய், பெங்களூர் – 14,318 ரூபாய், ஹைதராபாத் – 14,318 ரூபாய், கேரளா – 14,318 ரூபாய், புனே – 14,318 ரூபாய், பரோடா – 14,323 ரூபாய், அகமதாபாத் – 14,323 ரூபாய், ஜெய்ப்பூர் – 14,333 ரூபாய், லக்னோ – 14,333 ரூபாய், கோயம்புத்தூர் – 14,498 ரூபாய், மதுரை – 14,498 ரூபாய் .

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 11,090 ரூபாய், மும்பை – 10,739 ரூபாய், டெல்லி – 10,754 ரூபாய், கொல்கத்தா – 10,739 ரூபாய், பெங்களூர் – 10,739 ரூபாய், ஹைதராபாத் – 10,739 ரூபாய், கேரளா – 10,739 ரூபாய், புனே – 10,739 ரூபாய், பரோடா – 10,744 ரூபாய், அகமதாபாத் – 10,744 ரூபாய், ஜெய்ப்பூர் – 10,754 ரூபாய், லக்னோ – 10,754 ரூபாய், கோயம்புத்தூர் – 11,090 ரூபாய், மதுரை – 11,090 ரூபாய் .

10 கிராம் பிளாட்டினம் விலை :

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் – சென்னை – 70,140 ரூபாய், மும்பை – 70,140 ரூபாய், டெல்லி – 70,140 ரூபாய், கொல்கத்தா – 70,140 ரூபாய், பெங்களூர் – 70,140 ரூபாய், ஹைதராபாத் – 70,140 ரூபாய், கேரளா – 70,140 ரூபாய், புனே – 70,140 ரூபாய், வதோதரா – 70,140 ரூபாய், அகமதாபாத் – 70,140 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் – சென்னை – 3,10,000 ரூபாய், மும்பை – 2,95,000 ரூபாய், டெல்லி – 2,95,000 ரூபாய், கொல்கத்தா – 2,95,000 ரூபாய், பெங்களூர் – 2,95,000 ரூபாய், ஹைதராபாத் – 3,10,000 ரூபாய், கேரளா – 3,10,000 ரூபாய், புனே – 2,95,000 ரூபாய், பரோடா – 2,95,000 ரூபாய், அகமதாபாத் – 2,95,000 ரூபாய், ஜெய்ப்பூர் – 2,95,000 ரூபாய், லக்னோ – 2,95,000 ரூபாய், கோயம்புத்தூர் – 3,10,000 ரூபாய், மதுரை – 3,10,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் – BHD 53 – 12,696 ரூபாய்
குவைத் – KWD 41.91 – 12,376 ரூபாய்
மலேசியா – MYR 583 – 12,997 ரூபாய்
ஓமன் – OMR 54.85 – 12,873 ரூபாய்
கத்தார் – QAR 512 – 12,684 ரூபாய்
சவுதி அரேபியா – SAR 522 – 12,569 ரூபாய்
சிங்கப்பூர் – SGD 184.90 – 12,960 ரூபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – AED 517 – 12,713 ரூபாய்
அமெரிக்கா – USD 143.50 – 12,958 ரூபாய்
அபுதாபி (UAE) – AED 513.75 – 12,633 ரூபாய்
அஜ்மான் (UAE) – AED 513.75 – 12,633 ரூபாய்
துபாய் (UAE) – AED 513.75 – 12,633 ரூபாய்
புஜைரா (UAE) – AED 513.75 – 12,633 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) – AED 513.75 – 12,633 ரூபாய்
ஷார்ஜா (UAE) – AED 513.75 – 12,633 ரூபாய்
தோஹா (Qatar) – QAR 512 – 12,684 ரூபாய்
மஸ்கட் (Oman) – OMR 54.85 – 12,873 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) – SAR 522 – 12,569 ரூபாய்
இங்கிலாந்து – GBP 100.73 – 12,212 ரூபாய்
கனடா – CAD 199.25 – 12,948 ரூபாய்
ஆஸ்திரேலியா – AUD 215.30 – 12,987 ரூபாய்
நேபாளம் – NPR 21,809.36 – 13,623 ரூபாய்
சீனா – CNY 941.91 – 12,189 ரூபாய்
பாகிஸ்தான் – PKR 37,173.60 – 11,983 ரூபாய்
பங்களாதேஷ் – BDT 16,522.70 – 12,194 ரூபாய்
இலங்கை – LKR 45,770 – 13,359 ரூபாய்
ரஷ்யா – RUB 10,672.40 – 12,285 ரூபாய்
ஜப்பான் – JPY 21,327 – 12,146 ரூபாய்
ஜெர்மனி – EUR 115.70 – 12,157 ரூபாய்
பிரான்ஸ் – EUR 115.70 – 12,157 ரூபாய்
நியூசிலாந்து – NZD 234.97 – 12,178 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் – BHD 56.80 – 13,606 ரூபாய்
குவைத் – KWD 45.83 – 13,534 ரூபாய்
மலேசியா – MYR 609 – 13,577 ரூபாய்
ஓமன் – OMR 58.75 – 13,789 ரூபாய்
கத்தார் – QAR 552.50 – 13,687 ரூபாய்
சவுதி அரேபியா – SAR 567 – 13,653 ரூபாய்
சிங்கப்பூர் – SGD 202.50 – 14,193 ரூபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – AED 558.50 – 13,733 ரூபாய்
அமெரிக்கா – USD 151.50 – 13,681 ரூபாய்
அபுதாபி (UAE) – AED 554.75 – 13,641 ரூபாய்
அஜ்மான் (UAE) – AED 554.75 – 13,641 ரூபாய்
துபாய் (UAE) – AED 554.75 – 13,641 ரூபாய்
புஜைரா (UAE) – AED 554.75 – 13,641 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) – AED 554.75 – 13,641 ரூபாய்
ஷார்ஜா (UAE) – AED 554.75 – 13,641 ரூபாய்
தோஹா (Qatar) – QAR 552.50 – 13,687 ரூபாய்
மஸ்கட் (Oman) – OMR 58.75 – 13,789 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) – SAR 567 – 13,653 ரூபாய்
இங்கிலாந்து – GBP 109.89 – 13,323 ரூபாய்
கனடா – CAD 210.50 – 13,680 ரூபாய்
ஆஸ்திரேலியா – AUD 234.90 – 14,169 ரூபாய்
நேபாளம் – NPR 23,705.83 – 14,807 ரூபாய்
சீனா – CNY 1,027.54 – 13,297 ரூபாய்
பாகிஸ்தான் – PKR 40,553 – 13,073 ரூபாய்
பங்களாதேஷ் – BDT 18,024.80 – 13,303 ரூபாய்
இலங்கை – LKR 49,930 – 14,573 ரூபாய்
ரஷ்யா – RUB 11,642.60 – 13,402 ரூபாய்
ஜப்பான் – JPY 23,267 – 13,251 ரூபாய்
ஜெர்மனி – EUR 126.20 – 13,260 ரூபாய்
பிரான்ஸ் – EUR 126.20 – 13,260 ரூபாய்
நியூசிலாந்து – NZD 256.30 – 13,283 ரூபாய்

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை கடைகள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. தங்க காயின்கள் வாங்குவோருக்கு தள்ளுபடி, மேக்கிங் சார்ஜ் குறைப்பு போன்ற ஆஃபர்கள் உள்ளன. விவசாயிகள் அறுவடை பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கம் என்பதால், இந்த சலுகைகள் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பொங்கல் காலத்தில் தங்கம் வாங்குவது செல்வ செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.

Share This Article Story first published: Thursday, January 15, 2026, 11:53 [IST] Other articles published on Jan 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *