Breaking: புதிய உச்சத்தில் தங்கம் & வெள்ளி! இப்போ முதலீடு செஞ்சா 2026-க்குள் கைமேல் பலன் கிடைக்குமா?

befunky-collage-2026-01-23t131622-555-1769154467

  செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் & வெள்ளி! இப்போ முதலீடு செஞ்சா 2026-க்குள் கைமேல் பலன் கிடைக்குமா?

News oi-Pugazharasi S By Published: Friday, January 23, 2026, 13:18 [IST] Share This Article

தங்கம் மற்றும் வெள்ளி விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு, சாதாரண மக்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு விலை ஏறிய பிறகு இப்போது வாங்கினால் நஷ்டமாகிவிடுமோ? என்ற பயம் ஒருபுறம், இன்னும் விலை ஏறுவதற்குள் வாங்கிவிட வேண்டும் என்ற அவசரம் மறுபுறம் என சந்தையில் ஒருவித பதற்றம் நிலவி வருகிறது.

உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள், தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றியுள்ளன. அதேபோல், தொழில்துறை தேவைகளால் வெள்ளியின் மதிப்பும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், 2026-ம் ஆண்டிற்குள் உங்கள் முதலீடு இரட்டிப்பாகுமா அல்லது விலை சரிவை சந்திக்குமா? தற்போதைய உச்சத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

புதிய உச்சத்தில் தங்கம் & வெள்ளி! இப்போ முதலீடு செஞ்சா 2026-க்குள் கைமேல் பலன் கிடைக்குமா?

இனி எப்படியிருக்கும்?

பாதுகாப்பு முதலீடாக தங்கம் ஜொலிக்கும் அதேவேளையில், சோலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அபரிதமான தேவையால் வெள்ளியும் வெள்ளை தங்கமாக மாறியுள்ளது. இந்த சூழலில் குறுகிய காலத்தில் விலை அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதனிடையே விலையில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய சரிவையும் முதலீட்டாளர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தொடர்ந்து வாங்கி வருகின்றனர். இதனால் இரு விலை உயர்ந்த உலோகங்கள் விலை பெரிய அளவில் சரிவைக் காணவில்லை.

தரகு நிறுவன கணிப்பு?

என்ரிச் தரகு நிறுவன அறிக்கையின் படி, தங்கத்தின் விலை நீண்ட கால அடிப்படையில் வலுவான ஏற்றம் காணலாம் எனும் விதமாக இருப்பதாகவும், விலை உயர்வுக்கான காரணிகள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஏற்றம் காணலாம். ஆக விலை குறையும் போதெல்லாம் வாங்கிப் போடலாம். 2025ல் இருந்த வலுவான ஏற்றமானது, நடப்பு ஆண்டிலும் தொடரலாம். குறிப்பாக பங்குச் சந்தைக்கு மாற்றாக தங்கம் மற்றும் வெள்ளியை பார்க்கலாம். ஏனெனில் சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் மத்தியில், பாதுகாப்பு கருதி இவற்றில் முதலீடு செய்யலாம்.

குறிப்பாக வெள்ளியின் தேவையானது சோலார் எனர்ஜி, மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்களில் அதிகரித்து வருகிறது. ஆக வலுவான தேவை காணப்படுகிறது. இது வெள்ளி விலைக்கு ஆதரவாக அமையலாம். மேற்கொண்டு இது விலைக்கு ஆதரவளிக்கும் விதமாக சப்ளையிலும் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆக இது மேலும் விலையை ஊக்கப்படுத்தலாம். இது வெள்ளியில் லாபம் பார்க்க உதவிகரமாக இருக்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Gold and silver have hit record highs again: Is it still a wise time to invest or wait for a dip?

Precious metals remain bullish in 2026 due to geopolitical risks. While prices are high, experts suggest small, sep by step investments rather than chasing momentum blindly. Story first published: Friday, January 23, 2026, 13:18 [IST] Other articles published on Jan 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *