பாகிஸ்தான்ல நடந்தா பயங்கரவாதம், இந்தியாவுல நடந்தா கார்வெடிப்பா? – வெளிவந்தது அமெரிக்காவின் இரட்டைமுகம்
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 13:29 [IST] Share This Article
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்றார். அவர் தொடக்கம் முதலே பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்தியாவுடன் வர்த்தக மோதலை கைப்பிடிக்கும் டொனால்ட் டிரம்ப் மறுபுறம் பாகிஸ்தானுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார் .
மோடி என்னுடைய நண்பர் என கூறும் டிரம்ப், மறுபுறம் பாகிஸ்தானுக்கு தேவையான நிதி உதவிகளையும் செய்து வருகிறார். இத்தகைய சூழலில் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டு கார் வெடிப்பு குறித்து அமெரிக்க அரசாங்கம் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாடு தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .

திங்கட்கிழமை அன்று மாலை 6:52 மணி அளவில் செங்கோட்டை அருகே திடீரென ஒரு கார் வெடித்து சிதறியது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்து இருக்கின்றனர். தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த இந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும், அதிபர்களும் ,பிரதமர்களும் இந்தியாவுடன் இந்த தருணத்தில் துணை நிற்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். இதே சூழலில் தான் பாகிஸ்தானிலும் இஸ்லாமாபாத்தின் நீதிமன்ற வளாகத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அமெரிக்கா அரசு எதிர்வினை ஆற்றி இருக்கும் முறை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது .
Also Read
டெல்லி கார் வெடிப்பு: 3 மணி நேரத்திற்கு முன்பே எச்சரித்த நபர்..! வைரலாகும் ரெடிட் பதிவு!!
இந்தியாவில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் டெல்லியில் நடந்த பயங்கர வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம் என கூறியுள்ளது. அதே வேளையில் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் பகுதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம்” பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா துணை நிற்கிறது , இந்த முட்டாள்தனமான தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் “எனக் கூறியிருக்கிறது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் இந்த தாக்குதலையும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் கண்டிக்கிறோம் மேலும் நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருக்கிறது.
இரண்டு நாடுகளிலும் நடந்த தாக்குதலை அமெரிக்கா எப்படி பார்க்கிறது என்பது அதன் இரங்கலுக்கான வார்த்தை பயன்பாட்டிலேயே தெரிய வருகிறது என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். அமெரிக்க தூதரகம் இந்தியாவில் நடந்த தாக்குதலை பயங்கரவாதம் என குறிப்பிடாமல் வெறும் வெடிப்பு என்றே கூறுகிறது, ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்கிறோம் எனக் கூறியிருக்கிறதே என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
தினேஷ் அலுவாலியா என்பவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கா குடிமகன் என்ற முறையில் கூறுகிறேன் அமெரிக்கா அரசாங்கம் வெறும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இது ஒரு பயங்கரவாதம் என்பதை தன்னுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.
Recommended For You
உங்க உடம்புல இந்த நோய்கள் இருந்தா அமெரிக்க விசா கிடைக்காது- டிரம்ப் நிர்வாகம் புதிய அறிவிப்பு
ஒரு பயனர் ” இந்தியாவில் நடந்த நிகழ்வு வெறும் வெடிப்புதான் ,பாகிஸ்தானில் நடந்தால் மட்டும் அது பயங்கரவாத தாக்குதலா” என கூறியுள்ளார். இதுதான் அமெரிக்காவின் உண்மையான முகம் என ஒரு பயனர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு இதன் மூலம் வெளிவந்து விட்டது என கூறியிருக்கிறார்.
Share This Article English summary
Netizens slams US for double standard in condemning Delhi & Pakistan blast
US embassy’s statement over the deadly explosion near Red Fort in Delhi received massive criticism on social media. Here is what the US embassy said. Story first published: Wednesday, November 12, 2025, 13:29 [IST] Other articles published on Nov 12, 2025