Breaking: பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..!

Breaking: பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..!

  செய்திகள்

பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..!

News oi-Devika Manivannan By Published: Wednesday, November 5, 2025, 16:44 [IST] Share This Article

சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பது, விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்வது, சரக்கு போக்குவரத்து அதிகரிப்பது ஆகியவை காரணமாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் என்ற நிலை உண்டாகி இருக்கிறது.

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு விட்டன, மத்திய அரசின் அனுமதியும் , விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியும் பெறப்பட்டு விட்டது. தற்போது தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.

பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..!

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5746 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த 5746 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமாக 1972 ஏக்கர் நிலம் இருக்கிறது இது தவிர மீதமுள்ள நிலங்களை தான் அரசு தனியாரிடமிருந்தும் அங்கு அந்த பகுதியை சேர்ந்த மக்களிடமிருந்தும் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது .

தமிழ்நாடு அரசு பொருத்தவரை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை நிறைவேற்றுவதில் மிக தீவிரமாக இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஏகனாபுரம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட கிராம மக்கள் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் அரசு தரப்பில் அதிகபட்ச இழப்பீடு தந்து நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Also Readஓசூர் ஏர்போர்ட் உடன் போட்டி.. திடீரென பிளானை மாற்றிய கர்நாடகா!! தெற்கு பெங்களூரு தான் டார்க்கெட்!!ஓசூர் ஏர்போர்ட் உடன் போட்டி.. திடீரென பிளானை மாற்றிய கர்நாடகா!! தெற்கு பெங்களூரு தான் டார்க்கெட்!!

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக இதுவரை ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆயிரம் ஏக்கர் நிலத்திற்காக நில உரிமையாளர்களுக்கு மொத்தமாக 400 கோடி ரூபாய் வரை இழப்பீடு தரப்பட்டிருக்கிறது. இன்னும் 2774 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்த வேண்டி இருப்பதாக கூறி இருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் விமான நிலைய திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதிகாரிகள் களத்திற்கே சென்று சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நில எடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பரந்தூர் விமான நிலையம் மற்றும் அதற்கு ஏற்ற மற்ற பேருந்து இணைப்பு, ரயில் இணைப்பு , மெட்ரோ சேவை இணைப்பு உள்ளிட்ட ந்டவடிக்கைகளை தொடங்கிவிட்டது.

Recommended For YouAI டேட்டா சென்டர்களும்.. தண்ணீர் பிரச்சினையும்..! – இந்தியா இந்த சவாலை எப்படி எதிர்கொள்ள போகிறது? AI டேட்டா சென்டர்களும்.. தண்ணீர் பிரச்சினையும்..! – இந்தியா இந்த சவாலை எப்படி எதிர்கொள்ள போகிறது?

எனவே பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு தொடங்கி 2028க்குள் முதல்கட்ட விமான நிலைய பணிகளை முடிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. ஒருவேளை நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமானால் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருவது இன்னும் சில ஆண்டுகள் தாமதமாகும் . அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பரப்புரையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் முக்கிய இடம் பெறும்.

Share This Article English summary

1000 acres land has been acquired for Parandur international airport

Report says that Tamilnadu government has acquired 1000 acres of land for the construction of Parandur international airport. Story first published: Wednesday, November 5, 2025, 16:44 [IST] Other articles published on Nov 5, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *