Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

  செய்திகள்

தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

News oi-Prasanna Venkatesh By Published: Tuesday, November 18, 2025, 12:35 [IST] Share This Article

இந்திய சப்ளை செயினில் முக்கிய அங்கமாக மாறி வரும் கிக் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், தெலுங்கானா மாநில அரசு நேற்று முக்கியமான மசோதாவை கிக் ஊழியர்கள் நலனுக்காகத் தாக்கல் செய்துள்ளது. இது அம்மாநிலத்தில் இருக்கும் 4 லட்சத்திற்கும் அதிகமான கிக் ஊழியர்களும் பெரிய அளவில் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலத்தின் தான் கிக் ஊழியர்களுக்கான சட்டத்தை இயற்றி நடைமுறை செய்துள்ளது. இதன் பின்பு கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகியவை மசோதாவை தாக்கல் செய்து இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

இந்த நிலையில் இத்தகைய மசோதா மூலம் கிக் ஊழியர்களுக்கு எத்தகைய நன்மை கிடைக்கும்..? இதனால் கிக் ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும்..? குறிப்பாகத் தெலுங்கானா மாநில அரசு கிக் ஊழியர்களுக்கான நலனிலும், சேவையிலும் ஏதேனும் முறைகேடு நடந்தால் கடுமையான அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது கூடுதல் அதிர்ச்சியை நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த கிக் ஊழியர்கள்?
கிக் ஊழியர்கள் என்பது பொதுவான வார்த்தை, இதில் பல துறைகள், பல பணிகளில் இருப்பவர்கள் அடக்கம். கிக் ஊழியர்களுக்கான பொதுவான விளக்கம் என்றால் குறுகிய காலம் மட்டுமே பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிரந்தர தொடர்பு இருக்காது. இவர்களை 2 பிரிவுகளாகப் பிரிக்கலாம் பிளாட்பார்ம் ஊழியர்கள் மற்றும் பிளாட்பார்ம் அல்லாத ஊழியர்கள் என இரு வகைகளில் பிரிக்கலாம்.

பிளாட்பார்ம் ஊழியர்கள் எனில் ஆப் அடிப்படையிலான வர்த்தகத்திலும், டிஜிட்டல் – ஈகாமர்ஸ் வர்த்தகத்திலும் பணியாற்றும் டெலிவரி ஊழியர்களைக் குறிக்கும். பிளாட்பார்ம் அல்லாத ஊழியர்கள் எனில் கட்டுமான ஊழியர்கள், ஃப்ரீலான்சர்களை குறிக்கும். இந்த பிரிவு ஊழியர்களுக்கு, ஒரு முழு நேர ஊழியர்களுக்குக் கிடைக்கும் சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, சுகாதார காப்பீடு, மற்றும் இதர பாதுகாப்புகள் கிடைப்பதில்லை.

இதனால் இப்பரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பல வகையில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் இப்பிரிவுகளில் பணியாற்றும் காரணத்தால் மத்திய மாநில அரசுகள் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தெலங்கானா அரசின் புதிய மசோதா:
தெலங்கானா அமைச்சரவையில் நேற்று ‘தெலங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சட்டம் 2025’ மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்விக்கி, செப்டோ, ஜோமேட்டோ, Blinkit, உபர், ஓலா, அமேசான் ஃப்ளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் பகுதி நேரம் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஓட்டுநர்களும், டெலிவரி ஊழியர்களும், ஆன்லைன் தொழிலாளர்களுக்கு இது பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த மசோதா வரும் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என மூத்த அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில் இப்புதிய மசோதாவின் முக்கிய அம்சம் என்ன..?

20 உறுப்பினர் வாரியம்:
இந்த மசோதாவின்படி 20 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்படும். இதில் தொழிலாளர்கள், நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் சார்பில் முக்கிய உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு அதிகாரியை இந்த வாரியத்தின் நேரடி தொடர்புக்காக நியமிக்க வேண்டும்.

அனைத்து கிக் தொழிலாளர்களும் இந்த வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு நலவாரிய நிதி, சமூகப் பாதுகாப்பு, காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் கிடைக்கும் என திட்டவட்டமாகக் கூறப்பட்டு உள்ளது.

மேலும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை நேரடியாக இந்த 20 பேர் கொண்ட வாரியத்தில் புகார் அளித்து நிவாரணம் பெறலாம்.

வெல்ஃபேர் அமைப்பு:
இந்த மசோதாவின்படி சிறப்பு welfare fund ஒன்று உருவாக்கப்படும். இதில் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் நலக்கட்டணம், அரசு மானியம், நன்கொடைகள் சேர்க்கப்படும். இந்த நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, விபத்தில் இறப்பு நிவாரணம், இதர உதவிகளும், நலத்திட்டங்கள் வழங்கப்படும். இதுவரை கிக் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் இல்லாத நிலையில், இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

அல்காரிதம் வெளிப்படைத்தன்மை:
இதேபோல் இந்த மசோதாவில் ஆன்லைன் நிறுவனங்கள் வைத்திருக்கும் சேவை தளத்தின் அல்காரிதம் எப்படி வேலையை ஊழியர்கள் மத்தியில் ஒதுக்கீடு செய்கிறது, ஊக்கத்தொகை எப்படிக் கணக்கிடப்படுகிறது, தானியங்கி முடிவுகள் ஒரு ஊழியரின் ஊதியத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதைத் தொழிலாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

மேலும் முக்கியமான தகவல்கள் தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் மொழிகளில் வழங்கப்பட வேண்டும். இதனால் ஓட்டுநர்கள், டெலிவரி ஊழியர்கள் ஏன் குறைந்த ஊதியம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

புகார் தீர்வு வசதி:
100க்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் internal dispute resolution committee அமைக்க வேண்டும் எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் அரசு புகார் தீர்வு அதிகாரியும், துணை தொழிலாளர் ஆணையர் தலைமையிலான குழு இந்த மேல்முறையீட்டு அமைப்பை மேற்பார்வையிடும். தவறு செய்யாத தொழிலாளர்களை நீக்குவதற்கு ஏழு நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் மசோதாவில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

விதிமீறலுக்கு அபராதம்:
அரசு விதிக்கும் நலக் கட்டணம் செலுத்தாத நிறுவனங்களுக்கு முதல் விதி மீறலுக்கு 50,000 ரூபாயும், அடுத்தடுத்து நடக்கும் விதி மீறலுக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறையை நிறுவனங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

Share This Article English summary

Gig Workers Bill: Telangana Govts Big Move to give more social security for Delivery employees

Gig Workers Bill: Telangana Govts Big Move to give more social security for Delivery employees Story first published: Tuesday, November 18, 2025, 12:35 [IST] Other articles published on Nov 18, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *