Breaking: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

tnpension-1768100581

  செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

News oi-Devika Manivannan By Published: Sunday, January 11, 2026, 8:34 [IST] Share This Article

தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களுக்காக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.

அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் கடைசியாக பெறக்கூடிய அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கும் சமமான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

தமிழக அரசின் ஓய்வூதிய திட்ட அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த சூழலில் தான் இந்த புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. கடந்த மூன்றாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிவித்தார் ஆறாம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்து 2003 ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஜனவரி 1ஆம் தேதி தேசிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது என கூறியுள்ளார்.

Also Readபொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. எனவே பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் , ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து பரிந்துரை செய்ய தமிழ்நாடு அரசு முத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருந்தது. இந்த குழு டிசம்பர் மாதம் தன்னுடைய பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இதனை கவனமாக ஆய்வு செய்த தமிழக அரசு தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் 2026 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது என தெரிவித்திருக்கிறது. இதன்படி அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கும் கடைசியாக பெற்ற மாத சம்பளத்தில் 50% மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்காக அரசு ஊழியர்கள் தங்களுடைய மாத சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதற்கான கூடுதல் நிதியை தமிழக அரசே ஏற்கும்.

Recommended For YouCertificates வாங்க அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!! 50 சேவைகள் Whatsapp மூலம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு.!!Certificates வாங்க அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!! 50 சேவைகள் Whatsapp மூலம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு.!!

ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இது தவிர அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படும். இந்த மாதம் 1ஆம் தேதி முதல் தமிழக அரசு பணியில் சேரும் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களுக்கும் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கட்டாயமாகும். ஜனவரி 1ஆம் தேதி அல்லது பின் ஓய்வு பெறும் அனைத்து அரசு ஊழியர்களும் இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள். கடந்த 1ஆம் தேதிக்கு முன் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அல்லது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாம்.

Share This Article English summary

The Tamil Nadu Assured Pension Scheme comes into effect from January 1

The Tamil Nadu Assured Pension Scheme for State government employees, announced recently by Chief Minister M.K. Stalin, has come into effect from January 1, 2026. Story first published: Sunday, January 11, 2026, 8:34 [IST] Other articles published on Jan 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *