Breaking: தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!

enhanced-image33-1771991095

  செய்திகள்

தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, February 25, 2026, 9:29 [IST] Share This Article

தங்கம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்திய நகை கடைகளில் மக்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. என்னதான் விலை அதிகமாக இருந்தாலும் தங்களால் முடிந்த அளவுக்கு மக்கள் தங்கத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இந்தியாவில் தற்போது திருமண சீசன் என்பதால் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

தங்கம் விலையே பல மடங்கு உயர்ந்துள்ளது, குறிப்பாக ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றாலே 1.4 லட்சம் வரை செலுத்த வேண்டி இருக்கிறது. இப்படி தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தான் தங்க நகை வாங்குவோருக்கு என மத்திய அரசும் ரிசர்வ் வங்கியியும் சில கொள்கைகளை வகுத்து விதிகளை அறிவித்துள்ளன. இவற்றை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. இந்த விதிகளை தெரிந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் நீங்கள் கடைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!

விதிமுறை 1: நீங்கள் நகை கடைக்கு சென்று தங்க நகை வாங்குகிறீர்கள் அதன் விலை இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது எனும் போது உங்களுடைய பான் கார்டினை கடையில் சமர்ப்பிப்பது கட்டாயம். நகை கடை நிறுவனங்கள் வருமான வரித்துறை இடம் இந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே பான் கார்டு தகவல்கள் கேட்கப்படுகின்றன. தற்போது தங்க நகை விற்பனை செய்யும் விலையில் இரண்டு பவுன் நகை வாங்குகிறீர்கள் என்றால் கட்டாயம் உங்களுடைய பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும். எனவே இரண்டு பவுனுக்கு மேல் நகை வாங்கும் கட்டாயத்தில் இருப்பவர்கள் கடைக்கு செல்லும் போது உடன் உங்களுடைய பான் கார்டை கொண்டு செல்லுங்கள்.

Also Readதங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ?தங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ?

விதிமுறை 2: நிதி மோசடி மற்றும் வரியை ஏய்ப்புகளை தடுப்பதற்காக அதிகபட்ச பணப்பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கண்காணிக்கிறது. இதன் காரணமாக நீங்கள் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கினால் பான் மட்டுமில்லாமல் வேறு சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தங்கம் வாங்குகிறீர்கள் அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் கடந்து விட்டது எனும் போது பான் கார்டு மட்டும் இல்லாமல் உங்களுடைய ஆதார் தகவல்களையும், வருமான வரி கணக்கு தாக்கல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!

10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட எந்த ஒரு பரிவர்த்தனைகளையும் வங்கிகளும் அந்த பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களும் வருமானவரித்துறை இடம் தெரிவித்தாக வேண்டும். இதனால்தான் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்குவதாக இருந்தால் உங்களுடைய பான் கார்டு ஆதார் கார்டு மற்றும் வருமான சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.

Recommended For Youஇந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? தமிழ்நாட்டுக்கு பக்கத்திலேயே இருக்கா?இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? தமிழ்நாட்டுக்கு பக்கத்திலேயே இருக்கா?

விதிமுறை 3: தங்கம் விலைக்கு 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது அது மட்டுமில்லாமல் செய்கூலி கட்டணத்திற்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளர் தான் ஏற்க வேண்டும் என்கிறது அரசு. எனவே நீங்கள் ஜிஎஸ்டி செலுத்துவதையும் நகை கடை அதற்குரிய ரசீதை வழங்குவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதாவது தங்க நகை வாங்கும் போது , தங்கத்தின் எடை, செய்கூலி, ஜிஎஸ்டி ஆகிய தகவல்கள் அடங்கிய ரசீதை பெற வேண்டும். அப்படி நகை கடை தெளிவான ரசீதை வழங்கவில்லை என்றால் நீங்கள் ஏமாற்றப்படலாம். எனவே நகையில் ஹால்மார்க் குறியீடு இருப்பதை உறுதி செய்வதும் , நகை வாங்கியதற்கு ரசீது பெறுவதும் கட்டாயம்.

Share This Article English summary

Government Warning for Gold Buyers: PAN, Aadhaar Mandatory! Follow These 3 Key Rules!

Despite soaring gold prices during wedding season, crowds flock to Indian jewelers. However, the central government and RBI mandate three key rules for gold jewel buyers. Story first published: Wednesday, February 25, 2026, 9:29 [IST] See More On: தங்கம், மத்திய அரசு, பான், gold, pan Other articles published on Feb 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *