Breaking: தங்கம், வெள்ளியை புறக்கணித்த நிர்மலா சீதாராமன்!! பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இடம்பெறலையே!!

budgetgold3-1769947191

  செய்திகள்

தங்கம், வெள்ளியை புறக்கணித்த நிர்மலா சீதாராமன்!! பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இடம்பெறலையே!!

News oi-Devika Manivannan By Published: Sunday, February 1, 2026, 17:39 [IST] Share This Article

2026 – 27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு. கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்து இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் வரையிலான இந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை சுமார் 100% வெள்ளியின் விலை வெள்ளியின் விலை சுமார் 150 சதவீதத்திற்கும் மேலும் உயர்வு கண்டிருக்கின்றன.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு நேரடியாகவே சாமானிய மக்களிடமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தான் இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும். அதே வேளையில் தங்கம் மற்றும் வெள்ளியை அடகு வைத்து கடன் வாங்குவதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றெல்லாம் சாமானிய மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தங்கம், வெள்ளியை புறக்கணித்த நிர்மலா சீதாராமன்!! பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இடம்பெறலையே!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்து விட்ட நிலையில் உள்நாட்டில் அதன் விலையை குறைப்பதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு இறக்குமதி வரியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. தற்போது ஆறு சதவீதமாக இருக்கும் இறக்குமதி வரியை மேற்கொண்டு அரசு குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு சிலர் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் அதனை நிலைநிறுத்த அரசு தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை உயர்த்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள். ஆனால் அப்படி ஒரு அறிவிப்பும் வரவில்லை பட்ஜெட் உரையில், தங்கம் வெள்ளி என்ற வார்த்தையை கூட மத்திய நிதி அமைச்சர் பயன்படுத்தவில்லை என்பதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

Also Readபட்ஜெட்: வருமான வரி உச்சவரம்ப விடுங்க!! இந்த 200% அபராத அறிவிப்பை கவனிச்சீங்களா?பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்ப விடுங்க!! இந்த 200% அபராத அறிவிப்பை கவனிச்சீங்களா?

பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்க பத்திரங்கள் தொடர்பான ஒரு குறிப்பினை மட்டுமே வெளியிட்டார். அதாவது தங்க பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வழங்கப்படக்கூடிய மூலதன ஆதாய வரி விலக்கு என்பது அந்த பத்திரத்தை வாங்கிய நபர் அதன் முதிர்வு காலம் வரை அவரே வைத்திருக்கும் பட்சத்தில் தான் கிடைக்கும் என தெரிவித்தார்.

இங்கு மட்டுமே தங்க பத்திரத்திற்காக தங்கம் என்ற வார்த்தை இடம்பெற்றது. இதை தவிர்த்து வேறு எங்கேயும் தங்கம் என்ற வார்த்தையை கூட அவர் பயன்படுத்தவில்லை. அதேபோல வெள்ளியை குறித்தும் எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை. இந்தியாவின் நகை உற்பத்தியாளர்கள் அமெரிக்க வரி விதிப்பில் சிக்கி இருப்பதால் அரசு தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியும் ஜிஎஸ்டி வரியையும் குறைக்கும் என எதிர்பார்த்தனர் அது நடக்கவில்லை.

Also Readபட்ஜெட்: வருமான வரி உச்சவரம்ப விடுங்க!! இந்த 200% அபராத அறிவிப்பை கவனிச்சீங்களா?பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்ப விடுங்க!! இந்த 200% அபராத அறிவிப்பை கவனிச்சீங்களா?

சாமானிய மக்கள் இறக்குமதி வரி குறைந்தால் தங்கத்தின் விலை குறைவு என எதிர்பார்த்தனர் அதுவும் நடக்கவில்லை. இந்த சூழலில் நாளைய தினம் தங்கத்தின் விலை என்ன ஆகுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் மத்திய அரசு ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்களுக்கான டிரேடிங்கிற்கு எஸ்டிடி வரிவிகிதத்தை உயர்த்தி இருக்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றப் போகின்றன என்பது நாளைய தினம் பங்குச்சந்தையில் தெரியவரும். எனவே இந்தியாவில் நாளை பங்குச்சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு வேளை தங்கம், வெள்ளி விலையை உயர்த்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச காரணிகளும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாளை காலை வரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share This Article English summary

Union Budget: No specific announcement about gold & Silver

Union Budget 2026, presented today, made no specific announcements or changes regarding gold and silver, such as alterations to import duties or taxation rules for these metals. Story first published: Sunday, February 1, 2026, 17:39 [IST] Other articles published on Feb 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *