தங்கம் ரூ.43,000 , வெள்ளி ரூ.1.6 லட்சம் : இது யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் ஆச்சே!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 31, 2025, 9:52 [IST] Share This Article
2025 ஆம் ஆண்டு இறுதி நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஜனவரி முதலே தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை எட்டிய தங்கம் விலை நவம்பர் மாதத்தில் சற்றே சரிவடைந்தது.
டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்தது. 2025ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை இப்படி உயர்ந்து கொண்டே செல்கிறது என மக்கள் கடும் கலக்கமடைந்தனர். இந்த சூழலில் தான் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சரிவடைந்து வருகிறது.

சென்னையில் நேற்றைய தினம் தடாலடியாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு 420 ரூபாயும் ஒரு சவரனுக்கு 3360 ரூபாயும் விலை குறைந்தது. ஆண்டின் இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் சரிந்துள்ளது இதன் மூலம் நேற்று 12,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று 12,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் 1,00,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று 1,00,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இருந்தாலும் நேற்று குறைந்த அளவுக்கான ஒரு தடாலடியான விலை குறைவு இன்று இல்லை.
ஜனவரி ஒன்றாம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 7,150 ரூபாயாக இருந்தது அதுவே இன்றைய தினம் 12,550 ரூபாயாக விற்கப்படுகிறது. அதாவது இந்த ஓராண்டு காலத்தில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5400 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 43,200 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது.
Also Read
2025 ஆம் ஆண்டை போலவே 2026இலும் தங்கம் விலை உயர்ந்தால் ஒரு கிராம் விலை எவ்வளவாக இருக்கும்?
18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 35 ரூபாய் விலை குறைந்து 10,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 83, 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்து 13,691 ரூபாய்க்கும் ஒரு சவரன் 440 ரூபாய் விலை குறைந்து 1,09,528 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது . 10 கிராம் தங்கம் 1,36,910 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Recommended For You
வெள்ளியில் முதலீடு செஞ்சு மாட்டிக்காதீங்க!! இவரே இப்படி சொல்லிட்டாரே!! இப்போ என்ன செய்யுறது?
வெள்ளியை பொருத்தவரை அதன் விலையில் இன்று எந்த ஒரு மாற்றமும் இல்லை ஒரு கிராம் வெள்ளி 258 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,58,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று வெள்ளி விலை ஒரு கிராம் 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதுவே ஆண்டின் கடைசி நாளில் 258 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 160 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோவுக்கு 1.6 லட்சம் ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஆனால் இது ஒரு குறுகிய கால சரிவு தான் என்கின்றனர் நிபுணர்கள். மக்கள் இந்த விலை குறைவை பயன்படுத்து அறிவுரை வழங்குகின்றனர். 2026இலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என்றே பல கணிப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.
Share This Article English summary
Gold price in chennai: How much the yellow metal price increased in 2025?
Gold rate in chennai declines second consecutive day. There is no change in silver rate. As we are in the last day on 2025, here is how much the gold and silver rate have increased in this year. Story first published: Wednesday, December 31, 2025, 9:52 [IST] Other articles published on Dec 31, 2025
