Breaking: டெக் உலகிற்குபட்ஜெட் கொடுத்த பூஸ்ட்!  AI மற்றும் செமிகண்டக்டர்துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்!

befunky-collage98-1769939822

  செய்திகள்

டெக் உலகிற்குபட்ஜெட் கொடுத்த பூஸ்ட்!  AI மற்றும் செமிகண்டக்டர்துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்!

News oi-Pugazharasi S By Published: Sunday, February 1, 2026, 15:27 [IST] Share This Article

இனி உலகம் இந்திய தொழில்நுட்பத்தை அண்ணாந்து பார்க்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்றைய உலகில் வல்லரசு என்பது ஆயுதங்களை வைத்ததல்ல, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) மற்றும் செமிகண்டக்டர் பலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதை உணர்ந்து, ISM 2.0 திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்திக்கு 40,000 கோடி பிரம்மாண்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெறும் சாப்ட்வேர் ஏற்றுமதியோடு நில்லாமல், சொந்தமாக சிப்களை வடிவமைத்து தயாரிக்கும் திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. இதோடு 10,300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியா AI மிஷன், விவசாயம் முதல் விண்வெளி வரை ஒரு டிஜிட்டல் புரட்சியை நிகழ்த்த போகிறது. இது வெறும் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமல்ல, லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தற்சார்பு இந்தியா கனவுக்கான மின்னணு சான்றிதழ் ஆகவும் பார்க்கப்படுகிறது.

டெக் உலகிற்குபட்ஜெட் கொடுத்த பூஸ்ட்!  AI மற்றும் செமிகண்டக்டர்துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்!

டெக் வல்லரசாக மாறும் இந்தியா!

இந்தியாவை உலகின் தொழில்நுட்ப தலைநகராக மாற்றும் நோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மின்னணு உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் டேட்டா செண்டர்கள் என அனைத்து துறைகளிலும் இந்தியா தடம் பதிக்க உள்ளது.

மின்னணு மற்றும் செமிகண்டக்டர் புரட்சி!

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு (ECMS) கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 40,000 கோடி ரூபாய் நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் மிஷன் 2.0

இந்திய செமிகண்டக்டர் மிஷனின் இரண்டாம் கட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் செமிகண்டக்டர் தயாரிப்பு உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் இந்தியாவிற்கே உரித்தான IP டிசைன்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தொழில்முறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இது இந்தியாவை செமிகண்டக்டர் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.

கல்வி மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஏஐ

அனிமேஷன் மற்றும் கேமிங் துறையை ஊக்குவிக்க, மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜி மூலம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 15,000 கன்டென்ட் லேப்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொழுதுபோக்கு துறையை, வர்த்தக துறையாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றும்.

பாரத்-விஸ்டார்

விவசாயிகளுக்காக பல மொழிகளில் இயங்கும் AI கருவி அறிமுகப்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை மற்றும் வானிலை குறித்த ஆலோசனைகளை துல்லியமாக வழங்கும். இது விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை விரைவில், எளிதாக வழங்க உதவிகரமாக இருக்கும்.

தரவு மையங்களுக்கான மெகா சலுகை

இந்தியாவில் கிளவுட் சர்வீஸ் வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய விற்பனையாளர்கள் மூலம் சேவைகளை வழங்கினால், அவர்களுக்கு 2047 வரை வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை உலகின் டேட்டா சென்டர் ஹப் ஆக மாற்றும். வேலை வாய்ப்பையும் பெருக்கும்.

ஐடி நிறுவனங்களுக்கு நிம்மதி!

ஐடி சேவைகளுக்கான வரி வரம்பு 300 கோடி ரூபாயில் இருந்து 2000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து டிஜிட்டல் சேவைகளும் தகவல் தொழில்நுட்ப சேவை என்ற ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு, 15.5% என்ற பொதுவான வரி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அறிவு தொகுப்பு (Digital Knowledge Grid)
இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய இடங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த தேசிய டிஜிட்டல் அறிவு தொகுப்பு உருவாக்கப்படும். இது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும்.இது மட்டுமல்ல அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய டெக் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.

இந்திய தொழில்நுட்பத் துறை எப்படி முன்னேறும்?

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் இந்தியாவை மூன்று முக்கிய வழிகளில் முன்னேற்றம் காண உதவிகரமாக இருக்கும்.
1. சீனா போன்ற நாடுகளை சார்ந்திருப்பதை விட்டுவிட்டு, செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதன் மூலம் இந்தியா ஒரு மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக மாறும்.

2. 15,000 கன்டென்ட் லேப்கள் மற்றும் AI பயிற்சி மையங்கள் மூலம், எதிர்காலத் தேவைகளான AI, குவாண்டம் மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகளில் இந்திய இளைஞர்கள் உலக நாடுகளுக்கு தலைமை தாங்குவார்கள்.

3. பட்ஜெட்டில் 2047 வரை அளிக்கப்பட்டுள்ள வரி சலுகைகள் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரும் நிறுவனங்களை இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யத் தூண்டும். இது பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். மொத்தத்தில் இந்தியா தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் செல்ல இந்த பட்ஜெட் உதவிகரமாக இருக்கும்.

Share This Article English summary

What are the seven key tech and AI milestones announced in Budget 2026 to drive India’s digital and manufacturing leadership?

Budget 2026 allocates Rs. 40,000 crore for electronics, launches ISM 2.0, introduces Bharat-VISTAAR AI for farmers, and establishes 15,000 AVGC labs, fueling 2.5 million future-ready tech jobs. Story first published: Sunday, February 1, 2026, 15:27 [IST] Other articles published on Feb 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *