டிவியில ஜியோ ஹாட்ஸ்டார் யூஸ் பண்றீங்களா? அடுத்த மாசம் இருந்து எக்ஸ்ட்ரா பணம் கட்ட போறீங்க!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 19, 2026, 17:24 [IST] Share This Article
ஸ்மார்ட் போன் பயன்பாடும் 5ஜி விரிவாக்கமும் இந்தியர்களின் பொழுது போக்கு அம்சங்களையே மாற்றி அமைத்துவிட்டது. ஜியோ ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம், சோனி, ஸீ என ஸ்ட்ரீமிங் செயலிகள் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துவிட்டது.
இப்போதெல்லாம் கேபிள் கனெக்சனை விடுத்து இந்த செயலிகளுக்கு சந்தா செலுத்தி டிவி போன்ற பெரிய திரை வழியாகவே பல நிகழ்ச்சிகளை காண முடிகிறது. அந்த வகையில் இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய செயலியாக ஜியோ ஹாட்ஸ்டார் இருந்து வருகிறது. பல்வேறு மொழிகளிலும் திரைபடங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என ஏராளமான நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஜியோ ஹாட்ஸ்டார்-இல் கண்டு ரசிக்கிறார்கள்.

குறிப்பாக ஐபிஎல் போட்டி நடைபெறும் காலங்களில் ஏராளமானவர்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக ஜியோ ஹாட்ஸ்டார் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் திடீரென தன்னுடைய சந்தா கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. அனைத்து பிரிவுகளிலும் புதிய கட்டணம் ஜனவரி 28ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான சந்தா கட்டணங்களும் உயர்ந்துள்ளன. தற்போது இந்திய மக்கள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியை மொபைல் என மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி என பல்வேறு கருவிகளில் பயன்படுத்துகின்றனர். மக்கள் இதனை பயன்படுத்தும் போக்கு மாறி இருக்கிறது அதற்கு ஏற்ப தரமான சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காக கட்டணங்களை உயர்த்துகிறோம் என ஜியோ ஹாட்ஸ்டார் தரப்பில் விளக்கம் தந்திருக்கிறது.
Also Read
ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மறுப்பது அநீதி; தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் பாகுபாடு?: திமுக எம்பி
குறிப்பாக கடந்த ஓராண்டு காலமாக தொலைக்காட்சி போன்ற பெரிய திரைகளில் ஜியோ ஹாட்ஸ்டார் பயன்பாடு என்பது அதிகரித்து இருக்கிறதாம். மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் பயன்படுத்துபவர்கள் மாதம்தோறும் 79 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதுவே காலாண்டு கட்டணம் 149 ரூபாயாகவும் ஓராண்டுக்கான கட்டணம் 499 ரூபாயாகவும் அப்படியே இருக்கிறது. மொபைலில் பயன்படுத்துபவர்களுக்கு எந்த ஒரு விலை உயர்வும் இல்லை.
Recommended For You
இப்படி பிளான் பண்ணி SIP முதலீடு செஞ்சா மாசா மாசம் உங்களுக்கு ரூ.1 லட்சமா திரும்ப கிடைக்கும்!!
ஆனால் இதுவே சூப்பர் சப்ஸ்கிரிப்ஷன் பிரிவில் உள்ளவர்களுக்கு மாதாந்திர கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 149 ரூபாயாக உள்ளது. சூப்பர் சப்ஸ்கிரிப்ஷனிலேயே காலாண்டு கட்டணமாக செலுத்துபவர்களுக்கு 299 ரூபாயாக இருந்த கட்டணம் 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கான கட்டணம் 899 ரூபாயிலிருந்து 1099 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பிரிவில் மாத கட்டணம் 299 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே காலாண்டு கட்டணம் 200 ரூபாய் உயர்த்தப்பட்டு 699 ரூபாயாகவும் ஒரு ஆண்டுக்கான கட்டணம் 1499 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பிரீமியம் மற்றும் சூப்பர் சப்ஸ்கிரிப்ஷனில் உள்ளவர்களுக்கு ஹாலிவுட் கண்டெண்டுகள் இனி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Share This Article English summary
JioHotstar Raises Super and Premium Plan Prices, Adds Monthly Options from January 28, 2026
JioHotstar announced price hikes for Super and Premium quarterly and annual plans effective January 28, 2026, while introducing new monthly subscriptions starting at ₹79 for mobile users. Story first published: Monday, January 19, 2026, 17:24 [IST] Other articles published on Jan 19, 2026
