Breaking: டிஜிட்டல் அரெஸ்ட்:90 லட்சத்தை இழந்த அதிகாரி! உங்களுக்கு இப்படி ஒரு கால் வந்தால் உடனே கட் பண்ணுங்க!

befunky-collage-2026-01-02t175036-534-1767356493

  செய்திகள்

டிஜிட்டல் அரெஸ்ட்:90 லட்சத்தை இழந்த அதிகாரி! உங்களுக்கு இப்படி ஒரு கால் வந்தால் உடனே கட் பண்ணுங்க!

News oi-Pugazharasi S By Published: Friday, January 2, 2026, 17:51 [IST] Share This Article

வீட்டிலேயே உங்களைச் சிறை வைத்து, உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் ஒரு புதிய வகை மிரட்டல் தான் இந்த டிஜிட்டல் அரெஸ்ட். சமீபத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், சிபிஐ (CBI) பேசுவதாக வந்த போன் காலை நம்பி, தன் வாழ்நாள் சேமிப்பான 90 லட்ச ரூபாயை சில நிமிடங்களில் இழந்துள்ளார். நாங்கள் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம், கேமராவை ஆஃப் செய்யாதீர்கள் என மிரட்டியே இந்த மோசடி அரங்கேறியுள்ளது. உங்கள் மொபைல் போன் வழியாகவே, உங்களை பயமுறுத்திப் பணம் பறிக்கும் இந்த மாயக் கும்பலிடம் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? என்றால் நிச்சயம் இருக்கிறது! உஷாராக இருங்கள். இதுபோன்ற மிரட்டல் கால்கள் உங்களுக்கு வந்தால், நீங்கள் செய்ய வேண்டிய அந்த 5 மிக முக்கியமான தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

டிஜிட்டல் அரெஸ்ட்:90 லட்சத்தை இழந்த அதிகாரி! உங்களுக்கு இப்படி ஒரு கால் வந்தால் உடனே கட் பண்ணுங்க!

டிஜிட்டல் அரெஸ்ட்டில் ஓய்வு அதிகாரி?

சமீபத்தில் ஆங்கில செய்தித் தளத்தில் வெளியான செய்தி ஒன்றில், 73 வயதான ஓய்வு பெற்ற நிதித்துறையை சேர்ந்த லக்னோவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடியில் சிக்கியுள்ளார். அமர்ஜித் சிங் என்ற அந்த பெரியவர் சுமார் 25 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மிரட்டப்பட்டுள்ளார். மும்பை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வீடியோ காலில், மோசடி கும்பல் தங்கள் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர். மிரட்டியதோடு மட்டுமல்ல, விசாரணைக்காக பணம் அனுப்பச் சொல்லி அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பயத்தில் இருந்த சிங், பதற்றத்தில் தனது பிக்சட் டெபாசிட்களை உடைத்தும், ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் யுபிஐ(UPI) மூலமாகவும் சுமார் 90 லட்சத்தை பல தவணைகளாக மாற்றியுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பயத்தில் இருந்த அமர்ஜித் சிங்கின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரின் மகன், சைபர் போலீஸில் புகார் அளித்த பின்னரே, இந்த மோசடியானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு குறிப்பிட்ட தொகையை முடக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனா கூட தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் 2 நாட்கள் இதுபோன்ற டிஜிட்டல் அரெஸ்டில் இருந்ததாக கூறியிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது. இதுபோன்ற பயத்தை மூலதனமாக கொண்டு தான் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஆனால் அதிலிருந்து தப்பிக்க கீழ்வரும் 5 முக்கிய விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

டிஜிட்டல் அரெஸ்ட் கிடையவே கிடையாது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்று கிடையவே கிடையாது. இது முற்றிலும் ஏமாற்று வேலை. காவல்துறை அலல்து எந்த ஒரு அமைப்பும் வீடியோ கால் அல்லது மெசேஜிங் ஆப் மூலம் யாரையும் கைது செய்யவோ அல்லது விசாரணை நடத்தவோ மாட்டார்கள். மேலும் வீடியோ காலில் அல்லது மற்ற அம்சங்கள் மூலம் உங்களுடைய தனிப்பட்ட ஆவணங்களையோ அல்லது ரகசிய ஆவணங்களையோ கேட்க மாட்டார்கள்.

பயத்திற்கோ, நெருக்கடிக்கோ அடிபணியாதீர்கள்

மோசடியாளர்கள் எப்போதும் உங்களை நிதானமாக சிந்திக்க விடக்கூடாது என்பதற்காக, ஒரு பதற்றமான சூழலிலேயே வைத்திருப்பார்கள். இப்போதே பணத்தை கட்டுங்கள். இல்லையெனில் சிறைதான் என மிரட்டுவார்கள். அதுபோன்ற நேரங்களில் பயப்படாமல், அந்த இணைப்பை துண்டித்து விட்டு அதிகாரப்பூர்வ அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, பிரச்சனையை தெரிவியுங்கள்.

அரசு ஒருபோதும் பணம் கேட்காது?

பொதுவாக ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு எந்தவொரு சூழலிலும் உங்களிடம் பணம் கேட்காது. போலீசோ, நீதிமன்றமோ அல்லது எந்தவொரு அரசுத் துறையோ விசாரணை என்ற பெயரில் அல்லது சரிபார்ப்பு என்ற பெயரில் உங்களை வங்கிப் பரிமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தாது. அப்படி யாராவது உங்களிடம் பணம் கேட்டால் அது கட்டாயம் மோசடியாக தான் இருக்கும். ஆக அதுபோன்ற கோரிக்கையை நிராகரியுங்கள். அப்படியும் சந்தேகம் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனையை கூறுங்கள்.

சுயமாகச் சரிபார்க்கவும்

யாராவது உங்களை மிரட்டினால், உடனடியாக உள்ளூர் காவல் நிலையம் அல்லது உங்கள் வங்கி மேலாளர் அல்லது நீங்கள் நம்பும் குடும்ப உறுப்பினர்களிடத்தில் சொல்லுங்கள். எதற்காகவும் பதற்றமடையாமல் நிதானமாக இருங்கள். சந்தேகத்திற்கு உரிய அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்தால் புகார் அளியுங்கள்.

தாமதிக்காமல் புகார் செய்யுங்கள்

ஒருவேளை நீங்கள் மோசடியாளர்களால் பணத்தை ஏமாந்து விட்டால், ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள். உடனே வங்கிக்கும், சைபர் கிரைம் ஹெல்ப்லைனுக்கும் தெரிவியுங்கள். எவ்வளவு விரைவில் புகார் அளிக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் பணத்தை மீட்க முடியும். மோசடியாளர்களின் கணக்கை ஆரம்பத்திலேயே முடக்கி பணத்தை ஹோல்டு செய்து வைக்க முடியும். ஆக தவறு நடந்துவிட்டது என்று கத்தி கூச்சலிடாமல், உடனே பணத்தை மீட்பதற்காக வேலையில் இறங்குங்கள்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

How did a retired officer lose Rs 90 lakh to a Digital Arrest scam? Are you safe from these 5 hidden threats?

Real authorities never arrest you via video call or demand money online. If someone threatens a Digital Arrest, stay calm, hang up immediately, and report it to the cyber police. Story first published: Friday, January 2, 2026, 17:51 [IST] Other articles published on Jan 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *