Breaking: ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..!

Breaking: ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..!

  செய்திகள்

ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..!

News oi-Devika Manivannan By Published: Thursday, November 13, 2025, 12:50 [IST] Share This Article

2026 -27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கட்கிழமை அன்று தன்னுடைய முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட் தொடர்பான தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.

மத்திய நிதி அமைச்சகத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக PHD Chamber of Commerce and Industry (PHDCCI), தன்னுடைய பரிந்துரைகளை அனுப்பி இருக்கிறது. அதில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது . நாட்டில் உற்பத்தியை மேம்படுத்தவும், தொழில் தொடங்குவதை எளிதாக்க கூடிய வகையிலும், உலகின் முதலீட்டு மையமாக இந்தியாவை மாற்றக்கூடிய வகையிலும் பல்வேறு வரி சார்ந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என கூறி இருக்கிறது .

ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..!

தற்போது இருக்கக்கூடிய தனிநபர் வருமான வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. மிடில் கிளாஸ் மக்களுக்கு வரி சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருமான வரி விகிதங்களில் பெரிய அளவில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது.

குறிப்பாக 30 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20% வருமான வரி, 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 25% வரி , 50 லட்சம் ரூபாய்க்கு மேலான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 30% வரி என மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது புதிய வரி நடைமுறையின் கீழ் 4 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு எந்த வரியும் இல்லை.

Also Read40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!!40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!!

4 முதல் 8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5%, 8 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10%, 12 முதல் 16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15%, 16 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20%, 20 முதல் 24 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 25%, 24 லட்சத்திற்கு மேல் 30% என வருமான வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான் வரி விகிதங்களை மாற்றி அமைக்க கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. செஸ் வரி மற்றும் சர் சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஒரே வரி விகிதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு , கார்ப்பரேட் வரி விகிதங்களில் சலுகை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

Recommended For You45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

இனி அடுத்தடுத்து பல்வேறு அமைப்புகளும் பட்ஜெட் தொடர்பான பரிந்துரைகளை மத்திய நிதி அமைச்சகத்திற்கு வழங்குவார்கள். செப்டம்பரில் தான் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமைப்பில் பெரிய சீர்த்திருத்தத்தை கொண்டு வந்தது. ஜிஎஸ்டி வரியில் இருந்த பல அடுக்குகள் குறைக்கப்பட்டன. தற்போது 5%, 18%, 40% என மூன்று விகிதங்களே நடைமுறையில் உள்ளன. இதே போன்ற ஒரு வரி திருத்தம் தனிநபர் வருமான வரியிலும் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share This Article English summary

PHDCCI Recommends 30% Slab for Incomes above Rs 50 Lakh #budget

In its pre-Budget recommendations to the Finance Ministry, the PHD Chamber of Commerce and Industry (PHDCCI) has proposed a revision in the income tax structure to make it more taxpayer-friendly. Story first published: Thursday, November 13, 2025, 12:50 [IST] Other articles published on Nov 13, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *