ஜனவரி 2026 முதல் இதெல்லாம் மாறப்போகுது! மக்களே செலவுகள் அதிகரிக்க போகுது.. உஷார்..!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, December 19, 2025, 19:13 [IST] Share This Article
புது வருஷம் பிறக்க போகுதுன்னு சந்தோஷமா கொண்டாடுவதற்கு முன்னாடி, உங்க பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்ட பல அம்சங்களில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்களை பற்றி முதல்ல தெரிஞ்சுக்கோங்க. வழக்கமாக புத்தாண்டுக்கு முன்னாடி புது புது திட்டங்கள் பலவும் வரும். ஆனால் ஜனவரி 2026 முதல் பல நிதி சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளன. அவை நிதி ரீதியாக எப்படி உங்களை பாதிக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

செலவு அதிகரிக்கலாம்!
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. சேவைகள் எளிதாக எளிதாக கட்டணங்களும், செலவுகளும் உயர்ந்து வருகின்றன. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இலவச சேவைகளை கொடுத்த வந்த நிறுவனங்கள், தற்போது அதை லாபகரமான வணிகங்களாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இதனால் தான் ஏடிஎம், கிரெடிட் கார்டுகள், வாலட்கள் மற்றும் வங்கி கிளை சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொடங்க இருக்கும் 2026ம் ஆண்டு செலவு அதிகரிக்கும் ஆண்டாக இருக்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி சேவையில் என்ன மாற்றம்?
ஐசிஐசிஐ வங்கியானது தனது கட்டண கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இனி ஒரு வாடிக்கையாளர் தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் கேமிங் பிளாட்பாரங்களில் பணம் செலுத்தினால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதோடு தேர்ட் பார்ட்டி டிஜிட்டல் வாலட்களில் பெரிய தொகையை லோட் செய்வதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி கிளைகளுக்கு சென்று ரொக்கமாக செலுத்தும் பில்களுக்கும் அதிக செலவுடையதாக மாறியுள்ளது. ஆஃப்லைன் சேவைகளை மட்டுமே நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மேலும் கிரெடிட் கார்டுகளில் பொழுதுபோக்குகளுக்காக வழங்கப்படும் சலுகைகளும் இனி கட்டுப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக திரைப்பட டிக்கெட்களுக்கான சலுகையில் கட்டுப்பாடு இருக்கும். இதற்கு குறைந்தபட்ச தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் கார்டு பயனர்கள் கூட, ரிவார்டு பாயிண்டுகளுக்கான, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியிருக்கும். குறைவாக செலவிட்டால் பலன்கள் குறையலாம்.
ஏர்டெல் பேமென்ட் வங்கியின் முக்கிய முடிவு?
ஏர்டெல் பேமெண்ட் வங்கியானது வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது. கட்டணம் வசூலிக்கும் சமயத்தில் உங்கள் கணக்கில் தொகை குறைவாக இருந்தால், பணம் வரும்போது கழிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது டிஜிட்டல் வாலட் நிறுவனங்கள் இலவச சேவையில் இருந்து, வருமானம் ஈட்டும் திசையை நோக்கி நகர்வதை காட்டுகிறது.
கிராமப்புற வங்கிகளுக்கு புதிய அடையாளம்?
நகர்ப்புற வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்களால் அழுத்தத்தை சந்தித்து வரும் அதே வேளையில், கிராமப்புற வங்கிகளை வலுப்படுத்த அரசாங்கம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அது நாட்டில் உள்ள அனைத்து பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் (Regional Rural Banks – RRBs) பொதுவான ஒரு அடையாளம் மற்றும் லோகோ-ஐ (Uniform Identity and Logo) அமல்படுத்தப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் நம்பகத்தன்மை, சீரான தன்மை மற்றும் வங்கிச் சேவைகள் எளிதாகக் கிடைப்பதை மேம்படுத்துவதில் இந்த முயற்சி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் மூலம் எந்த மாநிலமாக இருந்தாலும், கிராமப்புற வங்கிகளின் சேவைகளில் ஒரு பொதுவான தன்மையை கொண்டு வர இது உதவும். இது கிராமப்புற வங்கிகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
Share This Article English summary
What banking changes are coming this January? Are your service charges about to increase?
Starting January 2026, banking will become costlier as major banks like ICICI revise service fees. Customers face new charges on online gaming, wallet loads, and cash bill payments. Story first published: Friday, December 19, 2025, 19:13 [IST] Other articles published on Dec 19, 2025
