சுட்டெரிக்கும் வெயில்!! ஏசி வாங்குற பிளான் இருக்கா? தள்ளி போடாதீங்க!! சீக்கிரமே விலை ஏற போகுது!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, February 25, 2026, 11:59 [IST] Share This Article
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தற்போதே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. மே மாதம் தொடங்கிவிட்டதா என எண்ணும் அளவுக்கு பகல் வேலைகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் காலம் என்றாலே இந்தியாவில் ஏசி விற்பனை என்பது அதிகரிக்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20% வரை ஏசி விற்பனை அதிகரிக்கும் என சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஏசி விற்பனை நிறுவனங்களும் ஏசி விலையை உயர்த்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு வாடிக்கையாளர்களை அதிர்ச்சடைய வைத்திருக்கின்றன. இந்தியாவின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான வோல்டாஸ் தங்களின் ஏசி விலைகளை 15 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக தெரிவித்து இருக்கிறது.

காப்பர் விலை உயர்ந்தது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவது ஆகிய இரண்டு காரணங்களால் ஏசி தயாரிப்புக்கான செலவு அதிகரித்திருப்பதாக கூறியிருக்கும் ஓல்டாஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் முகுந்தன் மேனன் இந்த ஆண்டு தங்கள் நிறுவனத்தின் ஏசிக்களின் விலையை 5 லிருந்து 15% வரை உயர்த்தப் போவதாக கூறி இருக்கிறார். வோல்டாஸ் இந்திய ஏசி விற்பனை சந்தையில் 18 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது.
Also Read
மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்!! இந்திய பொருளுக்கு 126% வரி விதிப்பு!! ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி!!
இந்த ஆண்டு 15 லிருந்து 20% வரை ஏசி விற்பனை உயரும் என இந்த நிறுவனம் கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏசி தயாரிப்பில் அதிகமாக காப்பர், அலுமினியம் மற்றும் ஸ்டீல் ஆகியவை தேவைப்படுகின்றன. இவற்றின் விலை கடந்த ஆண்டை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. அது தவிர ஏசி தயாரிப்புக்கான சில பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. அமெரிக்கா டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்து இருப்பதால் அதிக ரூபாயை கொடுத்து அவற்றை வாங்க வேண்டியதாக இருக்கிறது என கூறுகிறார்.
Recommended For You
தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!
ஒவ்வொரு ஏசி தயாரிப்பதற்கான விலை 15% வரை உயர்ந்திருப்பதாக கூறும் அவர் கடந்த ஆண்டு ஒரு டன் காப்பர் 8,500 அமெரிக்க டாலராக இருந்தது அதுவே இந்த ஆண்டு 12000 டாலராக உயர்ந்து விட்டது என சுட்டிக்காட்டுகிறா. இதனால் ஏசி தயாரிப்பு விலை உயர்ந்துவிட்டது எனவே விலையையும் உயர்த்த போகிறோம் என கூறுகிறார்.
எப்போது முதல் ஏசி விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என தெரியவில்லை. எனவே ஏசி வாங்கும் பிளானில் இருப்பவர்கள் இப்போதே வாங்கி கொள்வது நல்லது. வோல்டாஸை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் சத்தமில்லாமல் விலையை உயர்த்த திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் வாங்கலாம், ஏப்ரலில் வாங்கி கொள்ளலாம் என தள்ளிபோட்டால் கூடுதல் தொகை கொடுத்து கூட வாங்க நேரிடலாம்.
Share This Article English summary
Voltas to Raise Air Conditioner Prices 5-15% Due to Copper Surge and Rupee Weakness
Voltas, India’s top air conditioner maker with 18% market share, plans a 5-15% price hike in 2026 driven by higher copper prices, rupee depreciation impacting imports, and increased material needs. Story first published: Wednesday, February 25, 2026, 11:59 [IST] See More On: ஏசி, வோல்டாஸ், ac, voltas, summer Other articles published on Feb 25, 2026
