சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 14:03 [IST] Share This Article
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸை கட்டி எழுப்பியவர்களில் முதன்மையானவர் நாராயணமூர்த்தி. இவரை இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவர் கூறும் கருத்துகள் அனைத்துமே கவனம் பெறும்.
கடந்த 2023ஆம் ஆண்டில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதன் மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்துக்கும் மேல் உழைக்க வேண்டும் என கூறினார். நாராயண மூர்த்தியின் இந்த கூற்று இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது . பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

வாரத்திற்கு 72 மணி நேரம் நாங்கள் வேலை செய்தால் அதன் பலனை முதலாளிகள் அனுபவித்துக் கொள்வீர்கள் என பலரும் சாடினர். ஊழியர்களுக்கு வொர்க் லைஃப் பேலன்ஸே இருக்க கூடாதா, எங்களுக்கு என குடும்பம் இல்லையா, குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க கூடாதா என பலரும் அவரை சாடினர்.
இந்த நிலையில் இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் ஒரு முறை கூறி இருக்கிறார் நாராயணமூர்ய்த்தி. ரிபப்ளிக் டிவிக்கு பேட்டி அளித்திருக்கும் நாராயணமூர்த்தி சீனாவின் 9-9-6 பணி கலாச்சாரம் குறித்து உங்களுக்கு தெரியுமா என கேட்டிருக்கிறார். உலக அளவில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா தான் ஒரு பெஞ்ச்மார்க்காக பார்க்கப்படுகிறது.
Also Read
ஐடி ஊழியர்கள் சிஸ்டமை விட்டு நகரக் கூடாதா? கண்காணிப்பு குறித்த சர்ச்சைக்கு Cognizant விளக்கம்!!
உலக பொருளாதாரத்தில் இரண்டாவது இடம் வகிக்கிறது சீனா. ஆனால் இந்த வளர்ச்சி அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை. இதனை குறிப்பிட்ட பேசி இருக்கும் நாராயணமூர்த்தி சீனாவில் 9-9-6 என்ற பணி கலாச்சாரம் இருக்கிறது, சீனா டெக் நிறுவனங்களில் பொதுவாக பின்பற்றப்படும் ஒரு வேலை நேரம் தான் இது என குறிப்பிட்டு இருக்கிறார். ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை செய்வார்கள் ஒரு வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்வார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார் .
Recommended For You
தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!
சீனா தொழில்நுட்ப ரீதியில் வேகமான வளர்ச்சி அடைந்தபோது சீன நாட்டு நிறுவனங்கள் அனைத்துமே பின்பற்றிய வேலை நேரம் இதுதான் குறிப்பாக அலிபாபா போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.சீனாவை போல இந்தியாவும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் இந்தியர்கள் சீனாவின் பணி கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். இளைஞர்கள் தங்களுடைய வேலையில் முன்னேறுவதில் தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.
முதலில் லைஃப் உருவாக்குங்கள் அதன் பின்னர் வொர்க் லைஃப் பேலன்ஸ் குறித்து சிந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.இந்தியாவை விட சீனாவின் பொருளாதாரம் ஆறு மடங்கு அதிகமானது என கூறும் அவர் இந்தியாவை சேர்ந்த ஒவ்வொரு பிரிவினரும் கடினமாக உழைத்தால் மட்டுமே அந்த வளர்ச்சியை நம்மால் எட்ட முடியும் என தெரிவித்திருக்கிறார்.
Share This Article English summary
Infosys Narayana Murthy pitches for 72 hours work week, with China’s 9-9-6 work culture
Infosys co-founder Narayana Murthy once again pitches for 72 hours work. This time he is referring to China’s well-known 9-9-6 work culture. Story first published: Tuesday, November 18, 2025, 14:03 [IST] Other articles published on Nov 18, 2025