சிக்னல கொடுத்துட்டாங்க !! மக்களே இனிமே செலவு கூட போகுது!! ரெடியா இருங்க!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 17, 2025, 8:29 [IST] Share This Article
இந்தியாவில் தற்போது செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என கூறலாம். ஒரு வீட்டில் குழந்தைகள் தவிர பெரியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரிடமும் தற்போது செல்போன் இருக்கிறது .
ஒரு சிலர் இரண்டு சிம் கார்டுகளை கூட பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் சராசரியாக ஒரு வீட்டில் குறைந்தபட்சம் மூன்று சிம் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன .மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த சிம் கார்டுகளின் ரீசார்ஜ்களுக்காகவே நம் பட்ஜெட்டில் ஒதுக்கியாக வேண்டி இருக்கிறது. தற்போது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமே 200 ரூபாய் என்ற நிலையில் இருப்பதால் நிச்சயம் 500 லிருந்து 600 ரூபாய் வரை நாம் ரீசார்ஜ் திட்டங்களுக்காக ஒதுக்க வேண்டும்.

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ஜியோ , ஏர்டெல்,வோடபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் என்னதான் போட்டி போட்டு வளர்ச்சி அடைந்து வந்தாலும் இந்த நிறுவனங்களுக்கு இணையான இணைய வசதியை இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தான் குறைவான ரீசார்ஜ் கட்டணங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறாமல் உள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் தங்களுடைய 4ஜி மற்றும் 5ஜி திட்டங்களுக்கான ரீசார்ஜ் கட்டணங்களை கூடிய விரைவில் உயர்த்தப் போகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திற்குள் தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் 16 முதல் 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த போகின்றன என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது மார்கன் ஸ்டான்லி நிறுவனம்.

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்கள் 16 முதல் 20% வரை உயரும் என அடித்துக் கூறி இருக்கிறது. அண்மைக்காலமாக ஏர்டெல் , ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தன்னுடைய குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டண திட்டங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டன. இதுவே நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தப் போவதற்கான முதல் அறிகுறி என தெரிவித்திருக்கிறது.
Also Read
SMS படிக்காமலேயே யார் , எதுக்கு அனுப்பி இருக்காங்கனு தெரியனுமா? இந்த ஒரு எழுத்து போதும்!!
அடுத்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தினால் கடந்த எட்டு ஆண்டுகளில் நடக்கும் நான்காவது பெரிய கட்டண உயர்வாக இருக்கும் . இதற்கு முன் 2019 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் 30 சதவீதம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அதிர்ச்சியை தந்தன. 2021 ஆம் ஆண்டு 20% , 2024 ஆம் ஆண்டில் 15 சதவீதம் என ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தன.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு நிச்சயம் 16 முதல் 20% வரை கட்டண உயர்வு இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணிப்பு வெளியிட்டு இருக்கிறது .ஒவ்வொரு முறை இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வரும் போது எல்லாம் ஏர்டெல் நிறுவனம் தான் மிகப்பெரிய வருவாயை ஈட்டி லாபம் காண்கிறது என கூறி இருக்கிறது .
Recommended For You
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் தொகை கிடைக்கும்?
இந்தியாவைப் பொறுத்தவரை ஏர்டெல் நிறுவனத்திற்கான average revenue per user அதாவது ஒரு பயனாளருக்கு சராசரியாக கிடைக்கக்கூடிய வருமானம் என்பது 2026 ஆம் நிதி ஆண்டில் 260 ரூபாய் என்றும் 2028ஆம் ஆண்டில் 360 ரூபாய் என்றும் உயரும் என தெரிவித்திருக்கிறது . தற்போது ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்பாலான இடங்களில் 5ஜி நெட்வொர்க் சேவைகளை கொண்டு வந்துவிட்டன. எனவே இதன் பிறகு அவர்கள் 5g நெட்வொர்க் தேவைக்காக பெரிய அளவில் பணத்தை செலவிடப் போவதில்லை. சிறந்த நெட்வொர்க் வழங்குவதை காரணமாக கூறி ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி லாபம் பார்ப்பார்கள் என கூறி இருக்கிறது.
Share This Article English summary
Telecom companies to hike recharge plan charges by 16-20%
Morgan Stanley expects telecom companies to raise prices by 16-20% on 4G and 5G plans between April and June 2026. Story first published: Wednesday, December 17, 2025, 8:29 [IST] Other articles published on Dec 17, 2025
