Breaking: சாயம் வெளுத்த தங்கம், வெள்ளி ETF.. 14% வீழ்ச்சி..! என்ன காரணம்..? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?

befunky-collage51-1769751597

  செய்திகள்

சாயம் வெளுத்த தங்கம், வெள்ளி ETF.. 14% வீழ்ச்சி..! என்ன காரணம்..? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?

News oi-Pugazharasi S By Updated: Friday, January 30, 2026, 11:11 [IST] Share This Article

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் கடந்த சில வாரங்களாக காணப்பட்ட அசுர வேகத்தின் மத்தியில், தற்போது ஒரு திடீர் சரிவை சந்தித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் நிலவி வந்த போர் பதற்றங்கள் முடிவுக்கு வராவிட்டாலும், அதற்கான முயற்சிகளில் ஏற்றப்பட்ட முன்னேற்றம் காரணமாகவும், அமெரிக்க டாலர் வலிமை பெற்றுள்ளதன் காரணமாகவும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது திடீர் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மேலும் தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பிறகு, பெரிய முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை வெளியே எடுத்ததும், இந்த சரிவுக்கு பின்னால் மற்றொரு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவின் மத்தியில், தங்கம், வெள்ளி சார்ந்த முதலீடுகளும், ஒரே நாளில் 14% வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் விலை ஏறும் போதெல்லாம் வாங்க துடித்த ரீடைல் முதலீட்டாளர்கள், இப்போது ஏற்பட்டுள்ள இந்த சரிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாமா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இந்த விலை வீழ்ச்சியின் பின்னணியில் உள்ள மற்ற காரணங்களையும், நிபுணர்களின் ஆலோசனைகளையும் விரிவாக பார்ப்போம்.

சாயம் வெளுத்த தங்கம், வெள்ளி ETF,14% வீழ்ச்சி! என்ன காரணம்..?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?

தங்கம் வெள்ளி கடும் வீழ்ச்சி!

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்தின் மத்தியில், ஜனவரி 30 அன்று தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப் (ETF)களும், பியூச்சர் தங்கம் விலையும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக பியூச்சர் சந்தையில் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள கான்ட்ராக்ட் தங்கம் விலையானது பியூச்சர் சந்தையில் 10 கிராமுக்கு 5% வரை சரிவைக் கண்டு, 1,75,100 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது அதன் வரலாற்று உச்சமான 1,93,096 ரூபாய் என்ற உச்ச விலையில் இருந்து சரிவைக் கண்டுள்ளது. இதே எக்ஸ்பைரி ஆகவுள்ள பிப்ரவரி கான்ட்ராக்ட் 6% வரை சரிவை கண்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் மார்ச் மாதம் முடிவடைய இருக்கும் கான்ட்ராக்ட் விலை 6% சரிவைக் கண்டு, 3,75,900 ரூபாயாக குறைந்துள்ளது. மே மற்றும் ஜூலை மாதங்களுக்கான வெள்ளி கான்ட்ராக்ட் விலையும் தலா 6% வீழ்ச்சி கண்டுள்ளன.

தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப் வீழ்ச்சி!

நிப்பான் இந்தியா இடிஎஃப் கோல்ட் பீஸ் ஆனது கடந்த ஒரு வருடத்தில் 104% வருமானம் கொடுத்துள்ளது. இது இன்று 10% சரிவைக் கண்டு 132 ரூபாயாக காணப்படுகிறது. இதே ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் கோல்ட் இடிஎஃப்-ம் கிட்டத்தட்ட 10% சரிவைக் கண்டுள்ளது. ஆக்சிஸ் கோல்ட் இடிஎஃப்-ம் 9% சரிவை கண்டுள்ளது. யுடிஐ கோல்ட் இடிஎஃப், எடில்வைஸ் கோல்ட் இடிஎஃப், ஹெச்.டி.எஃப்.சி கோல்ட் இடிஎஃப், குவாண்டம் கோல்ட் இடிஎஃப், டிஎஸ்பி கோல்ட் இடிஎஃப் உள்ளிட்ட ஃபண்டுகளும் கணிசமான சரிவைக் கண்டுள்ளன. இதில் மிரே அஸெட் சில்வர் இடிஎஃப் ஆனது சுமார் 13% அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. மோதிலால் ஓஸ்வால் சில்வர் இடிஎஃப் 12.5% சரிவைக் கண்டுள்ளது.

ஏன் சரிவு?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போதைய பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவலுக்கு பதிலாக, கெவின் வார்ஷ் (Kevin Warsh) என்பவரை நியமிக்கப் போவதாக வரும் தகவல்கள் சந்தையை அதிர வைத்துள்ளது. வார்ஷ் வட்டி விகிதங்களை குறைப்பதை விட, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார் என்பதால் டாலர் மதிப்பு உயர்ந்தது. இது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களின் விலை சரிய காரணமாகவும் அமைந்தது.

மேலும் கடந்த ஓராண்டில் தங்கம் 100% மற்றும் வெள்ளி 150% வரை லாபம் தந்துள்ள நிலையில், விலை உச்சத்தில் இருந்தபோது பெரிய முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியதும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் இப்போது வாங்கலாமா?

இது வீழ்ச்சியானது ஒரு சிறந்த விலை திருத்தம் மட்டுமே. சந்தையில் நிலவிய அதிகப்படியான உற்சாகம் தற்போது தணிந்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி இன்னும் வலிமையாகவே உள்ளன. ஆக நீங்கள் நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால், இந்தச் சரிவை ஒரு வாங்கும் வாய்ப்பாக (Buy on Dips) பயன்படுத்தலாம். ஆனால், மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், பிரித்து சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்வது பாதுகாப்பானது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Gold & Silver ETF Crash: A Golden Opportunity or a Value Trap?

gold, silver ETFs plunged 14% on Fed chair speculation and profit-booking. Analysts suggest this healthy correction offers a strategic entry point for long-term investors. Story first published: Friday, January 30, 2026, 11:10 [IST]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *