ஓசூர் விமான நிலைய திட்டம்: ஜெட் வேகத்தில் தமிழக அரசு! நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 15:55 [IST] Share This Article
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையத்தை அமைத்து விட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு ஜெட் வேகத்தில் செயல்படுகிறது . ஓசூர் – சூளகிரி தாலுகாவில் பேரிகை என்ற இடத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கான இடமாக தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த பகுதியில் 2980 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையத்தை கட்டமைப்பது என தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது .ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வகையில் ஓசூர் விமான நிலையத்தை கட்டுவது என்றும் பெங்களூரு மக்களையும் ஈர்க்கக் கூடிய வகையில் இந்த விமான நிலையம் அமைய வேண்டும் என்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருந்து வருகிறது.

இதற்காக தான் இந்த இடத்தையே தமிழ்நாடு அரசு தேர்வு செய்திருக்கிறது . இது தொடர்பாக ஒப்புதல் கேட்டு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது. இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை ஆனாலும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கி விட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது.
இந்த மாதமே நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி விட்டதாகவும் இதுவரை 845 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தி விட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் கிடைத்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி கூறுகிறது. அடவனப்பள்ளி, பலவணப்பள்ளி, நந்திமங்கலம் , வெங்கடேசபுரம் கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது.
Also Read
ஓசூர் விமான நிலைய திட்டத்தை தடுப்பதற்காக மறைமுக வேலை செய்கிறதா கர்நாடகா?
விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சென்னை நில மேலாண்மை ஆணையருக்கு அக்டோபர் மாதமே டிட்கோ கடிதம் அனுப்பியதாகவும் அந்த ஆணையர் அளித்த அனுமதி பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அதிகாரியாக நியமித்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சில கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இந்த திட்டத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இன்னும் விமான போக்குவரத்து ஆணையமே ஒப்புதல் வழங்காத நிலையில் தமிழ்நாடு அரசு ஏன் இவ்வளவு வேகமாக நிலம் கையகப்படுத்த பணிகளை மேற்கொண்டு இருக்கிறது என்ற கேள்வியையும் அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள் .
Recommended For You
வாக்காளர் பட்டியல்ல உங்க பெயர் இல்லையா? இந்த தேதிகள்ல முகாம் நடக்குது குறிச்சு வச்சிக்கோங்க!!
இங்கே விமான நிலையம் அமைக்கப்பட்டால் தங்களுக்கு விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் வேறு இடத்திற்கு திட்டத்தை மாற்றவும் நிலம் கையகப்படுத்தலை நிறுத்தி வைக்கவும் அவர் விவசாயிகள் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு ஓசூரில் விமான நிலையம் அமைத்தால் பொருளாதார ரீதியாகவும் தொழில் உற்பத்தி ரீதியாகவும் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறது.
விமான நிலையம் அமைந்தால் மேலும் பல முதலீடுகள் ஓசூர் நோக்கி வருகை தரும் என தமிழ்நாடு அரசு திட்டமிடுகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு பெங்களூரு விமான நிலைய நிறுவனம் பெரும் தடையாக இருக்கும் . ஏனெனில் 2033ஆம் ஆண்டு வரை தங்கள் விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவுக்கு எந்த விமான நிலையமும் அமைக்க கூடாது என மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
Share This Article English summary
Tamilnadu government begins the land acquisition process for hosur airport?
Reports says that the Tamilnadu government has already begun the land acquisition process for hosur international airport. Story first published: Thursday, December 25, 2025, 15:55 [IST] Other articles published on Dec 25, 2025
